வழிபாட்டுத் தலம்
சின்னக்கடைத்தெரு தசகாளியம்மன் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | சின்னக்கடைத்தெரு தசகாளியம்மன் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | காளியம்மன் கோயில் |
| ஊர் | மதுரை |
| வட்டம் | மதுரை |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 5 |
| தாயார் / அம்மன் பெயர் | தசகாளியம்மன் |
| திருக்குளம் / ஆறு | வைகை நதி |
| வழிபாடு | இருகால பூசை |
| திருவிழாக்கள் | ஆடி வெள்ளி, நவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.16-ஆம் நூற்றாண்டு / நாயக்கர் |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் தசகாளியம்மன் சிற்பமும், கருவறையின் எதிரே அம்மனின் வாகனமும் உள்ளன. மண்டபத் தூண்களில் புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன. |
| தலத்தின் சிறப்பு | தசகாளியம்மன் கோயில் சௌராஷ்டிர இனத்து மக்களால் எடுப்பிக்கப்பட்டு, அக்குலத்தவரால் வழிவழியாக வணங்கப்பட்டு வரும் கோயில். |
|
சுருக்கம்
மதுரை நகரில் உள்ள தெற்குவாசல் பகுதியில் சின்னக்கடைத் தெருவில் தசகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இப்பகுதியை சுற்றிவாழும் சௌராஷ்டிர இனத்தினருக்கு பாத்தியப்பட்டக் கோயிலாகும். இக்கோயிலில் உள்ள தசகாளியம்மன் இவ்வினத்தவரில் பலருக்கு குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது. தசகாளியம்மன் காளி வழிபாட்டில் ஒரு உருவமைதியாகும். இங்கு நாயக்கர் காலத்திய தூண்களோடு கூடிய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
|
|
சின்னக்கடைத்தெரு தசகாளியம்மன் கோயில்
| கோயிலின் அமைப்பு | தசகாளியம்மன் கோயில் கருவறையில் தசகாளியம்மன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். கருவறை சதுரவடிவில் அமைந்துள்ளது. மண்டபம் ஒன்று முக மண்டபமாக அமைந்துள்ளது. இம்மண்டபத்தூண்களில் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயில் நாயக்கர் கால கலைப்பாணியைக் கொண்டு விளங்குகிறது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | சௌராட்டிர சமூகத்தினருக்கு பாத்தியமானது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | மீனாட்சி அம்மன் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில், தென்திருவாலவாய் கோயில் |
| செல்லும் வழி | மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை |
சின்னக்கடைத்தெரு தசகாளியம்மன் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | தெற்குவாசல், சப்பாணி கோவில் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | மதுரை |
| அருகிலுள்ள விமான நிலையம் | மதுரை |
| தங்கும் வசதி | மதுரை நகர விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | சதீஷ், அமர்பாபு, அரிகரன், ராகுல், ராஜலிங்கம், க்ரேசி டாக்கர் தமிழ் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 38 |
| பிடித்தவை | 0 |