Back
வழிபாட்டுத் தலம்
அருள்மிகு திருப்பாலீசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அருள்மிகு திருப்பாலீசுவரர் கோயில்
வேறு பெயர்கள் அமிர்தேஸ்வரர்
ஊர் திருப்பாலைவனம்
வட்டம் திருவள்ளுர்
மாவட்டம் திருவள்ளூர்
உட்பிரிவு 1
மூலவர் பெயர் திருப்பாலீஸ்வர சுவாமி
தாயார் / அம்மன் பெயர் லோகாம்பிகா தேவி
தலமரம் ஆலமரம்
திருக்குளம் / ஆறு அமிர்தபஷ்கரணி தீர்த்தம்
ஆகமம் காரண ஆகமம்
வழிபாடு காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
திருவிழாக்கள் மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை
காலம் / ஆட்சியாளர் கி.பி.11-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜேந்திர சோழன்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கோட்ட தெய்வங்களாக தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மன், கணபதி ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. வீரபத்திரர், பிட்சாடனர், நால்வர், சிவலிங்கம், நந்தி, சுப்ரமணியர் ஆகிய தனிக்கல் சிற்பங்கள் கோயில் வளாகத்தில் வழிபாட்டில் உள்ளன. தூண்களில் அரச உருவங்கள், அடியவர்கள், அனுமன், குதிரைவீரன், பிட்சாடனர், முருகன் உள்ளிட்ட இறையுருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன. கோபுரத்தில் இறையுருவங்கள் சுதைச் சிற்பங்களாக காணப்படுகின்றன.
தலத்தின் சிறப்பு 900 ஆண்டுகள் பழமையானது. இடைக்காலச் சோழர் கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது.
சுருக்கம்
பாலை மரங்கள் நிறைந்த காடாக (வனமாக) ஒரு காலத்தில் இருந்ததால், 'பாலைவனம்' என்று அழைக்கப்பட்டது. இங்கு இத்திருத்தலம் அமைந்துள்ளதால் இவ்வூர் ' திருப்பாலைவனம்' எனப் பெயர் பெற்றது.
அருள்மிகு திருப்பாலீசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு திருப்பாலீசுவரர் கோயில் 16 கால் தூண்களுடன் கூடிய முகமண்டபத்தினை அடுத்து, ஐந்து நிலை அடுக்குகளைக் கொண்ட இராஜகோபுரத்தினைப் பெற்றுள்ளது. கோபுரத்தின் நுழைவாயிலின் இருபுறமும் கொடிப்பெண்கள் புடைப்புருவம் காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் மகாமண்டபமும் தூண்களைப் பெற்று விளங்குகிறது. அர்த்த மண்டபம் தொடர்ந்து கருவறை அமைந்துள்ளது. தென்புறம் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் ஆகியன அமைந்துள்ளன. மண்டபங்களின் தூண்கள் நாயக்கர், மற்றும் நகரத்தாரின் கலைப்பாணியை பெற்று விளங்குகின்றது. கருவறை விமானம் தூங்கானை மாட வடிவில் விளங்குகின்றது. தாங்குதளம் முதல் கூரைப்பகுதி வரை கற்றளியாக விளங்குகின்றது. தாங்குதளம் மற்றும் சுவர்ப்பகுதிகளில் சோழர்காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் வாசீஸ்வரர் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில்
செல்லும் வழி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலிருந்து 10 km தொலைவிலும், பழவர்காட்டிலிருந்து 8 km தொலைவிலும், மீஞ்சூரிலிருந்து 16 km தொலைவிலும் இத்திருத்தலம் உள்ளது. சென்னை செங்குன்றம் (Redhills) பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி வழியாக பழவேற்காடு செல்லும் அனைத்து பேருந்துகளும் இத்தலத்தின் அருகில் நின்று செல்லும். மீஞ்சூர் மற்றும் பொன்னேரியிலிருந்து நிறைய பேருந்துகள் செல்கின்றன.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00-12.00 முதல் மாலை 4.30-8.30 வரை
அருள்மிகு திருப்பாலீசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் பொன்னேரி, தச்சூர் கூட்டுச்சாலை
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருவள்ளுர்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி திருவள்ளுர் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 51
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்