வழிபாட்டுத் தலம்
தரங்கம்பாடி மசூதி
வழிபாட்டுத் தலத்தின் பெயர் தரங்கம்பாடி மசூதி
வேறு பெயர்கள் தரங்கம்பாடி கடற்கரை பள்ளிவாசல்
ஊர் தரங்கம்பாடி
வட்டம் தரங்கம்பாடி
மாவட்டம் நாகப்பட்டினம்
உட்பிரிவு 8
திருக்குளம் / ஆறு மசூதிக்குளம்
வழிபாடு ஐந்து காலத் தொழுகை
திருவிழாக்கள் ரமலான், பக்ரீத், மிலாடி நபி
காலம் / ஆட்சியாளர் கி.பி.17-ஆம் நூற்றாண்டு
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் இறை உருவங்கள், மனித உருவங்கள் மற்றும் விலங்குகள் போன்றவை செதுக்கப்படவில்லை அது இசுலாத்தின் இறைக்கொள்கைக்கு எதிரானது.
தலத்தின் சிறப்பு 300 ஆண்டுகள் பழமையானது.
சுருக்கம்
தரங்கம்பாடி கடற்கரையோரத்தில் அமைந்துள்ள இந்த மசூதி கி.பி.17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இப்பள்ளிவாசலின் பின்புறம் குளம் ஒன்று காணப்படுகிறது. சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மசூதி அமைக்கப்பட்டுள்ளது. உயர்ந்த மினார் கொண்டதாக இந்த இசுலாமிய வழிபாட்டுத்தலம் விளங்குகிறது.
தரங்கம்பாடி மசூதி
கோயிலின் அமைப்பு தரங்கம்பாடி பள்ளிவாசல் வளைவான முகப்புடன் கூடியதாக இந்தோ-அரேபியக் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்குகிறது. இதில் மனரா (கோபுரம்), உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் பச்சை வண்ணத்துடனும், பாங்குகள் ஒலிக்குமாறு சாளரங்களுடனும் கட்டப்பட்டுள்ளது. தொழுகை இடமானது புனிதவிடமாகக் கருதப்படுகிறது. தொழுகை இடம் மையப்பகுதியாகும். இரண்டு சுற்றுகளைக் கொண்டதாக தூண்களாலும், முகப்பு வளைவுகளாலும் பகுக்கப்பட்டு காட்சியளிக்கிறது. இப்பள்ளிவாசல்.உயரமான தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. தூண்களின் அடிப்பகுதி சதுரம், அடுத்து நான்கு பட்டையுடன் கூடிய நீண்ட கட்டுப்பகுதி, தொடரும் போதிகைப் பகுதி தரங்கப் போதிகையாகவும் விளங்குகிறது. தரை தளத்தில் பிரார்த்தனை செய்யப்படுகிறது .
பாதுகாக்கும் நிறுவனம்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் டேனிஷ் கோட்டை, மாசிலாமணிநாதர் கோயில், புனித ஜெருசலேம் சர்ச், சீகன் பால்குவின் நினைவுச்சின்னம், சியோன் கிறித்துவ ஆலயம், சீகன் பால்குவின் உருவச்சிலை
செல்லும் வழி திருச்சியில் இருந்து மயிலாடுதுறை வழியாக செல்லலாம். சிதம்பரத்தில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, காரைக்கால் செல்லும் பேருந்துகள் தரங்கம்பாடி வழியே செல்கின்றன. சென்னை மற்றும் புதுச்சேரியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரம் வந்து அங்கிருந்து தரங்கம்பாடி செல்லலாம். தரங்கம்பாடி கடற்கரையோரத்தில் இந்த மசூதி அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 5.00 முதல் பகல் 12.00 மணி வரை மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை
தரங்கம்பாடி மசூதி
அருகிலுள்ள பேருந்து நிலையம் தரங்கம்பாடி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் தரங்கம்பாடி
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி தரங்கம்பாடி விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் க.த.காந்திராஜன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 43
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்