வழிபாட்டுத் தலம்
தேவிப்பட்டினம்-நவக்கிரக திருக்கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | தேவிப்பட்டினம்-நவக்கிரக திருக்கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | நவக்கிரகக் கோயில், நவபாஷனக் கோயில், உலகமாதேவிப்பட்டினம் |
| ஊர் | தேவிப்பட்டினம் |
| வட்டம் | திருவாடானை |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | திலகேஸ்வரர் |
| தாயார் / அம்மன் பெயர் | செளந்தரநாயகி |
| திருக்குளம் / ஆறு | தேவிப்பட்டினம் தீர்த்தம் |
| திருவிழாக்கள் | நவக்கிரகங்களின் பெயர்ச்சி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.6-ஆம் நூற்றாண்டு / பாண்டியர், சேதுபதி |
| கல்வெட்டு / செப்பேடு | உலகமாதேவிப்பட்டினம் என்பது பாண்டியர் நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுள் ஒன்று. இது கி.பி. 875 - 1368 வரை அதிகம் அறியப்பட்டத் துறைமுகமாக விளங்கிற்று. முற்காலப் பாண்டியர் காலத்தில் இது இளங்கோமங்கலம் எனவும் அக்காலத்தில் இது அகநாடுகளுள் ஒன்றான செவ்விருக்கை நாட்டின் ஒரு பகுதியாகவும் இருந்தது. தற்போது இது திருவாடானை வட்டம் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. இதன் பெயர் பாண்டியனின் மனைவியின் பெயரை நினைவுப்படுத்தும் விதமாக உள்ளது. இன்று தேவிப்பட்டினம் என்றழைக்கப்படும் இவ்வூர் முன்பு உலகமாதேவிப்பட்டினம் என்றழைக்கப்பட்டதாக 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் உள்ளது. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | நவக்கிரகங்கள் கடலுக்குள் அமைந்துள்ளன. கடற்கரையில் திலகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. |
| தலத்தின் சிறப்பு | கடலுக்குள் அமைந்துள்ள நவக்கிரகத் தலமாகும். இராமரால் நிர்மாணிக்கப்பட்டு வழிபடப்பட்டதாக நம்பப்படுகிறது. |
|
சுருக்கம்
இந்தக் கோவிலுக்கு நவபாஷனக் கோவில் என்று ஓர் பெயரும் உள்ளது. (பாஷனம் - கல்). இங்கு நவதானியங்களை கொண்டு மக்கள் பூஜை செய்கின்றனர். அமாவாசை தினங்களில் ஏராளமானோர் குவிந்து அவர்களின் மூதாதையர்களையும் வழிபடுகின்றனர். ஆடி அமாவாசை தினத்தன்று இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை நடத்துகின்றனர். இராமருக்கு சனி தோஷம் நீங்கியதால், இங்கு வழிபட்டால் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். மேலும் இந்தக் கோவில் மூதாதையர்களை வழிபட மிகச்சிறந்த இடமாக கருதப்படுகிறது.
|
|
தேவிப்பட்டினம்-நவக்கிரக திருக்கோயில்
| கோயிலின் அமைப்பு | கடலுக்குள் நவக்கிரகங்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருப்புல்லாணி, இராமேஸ்வரம், நாகநாதர் கோயில், இராமநாதபுரம் அரண்மனை, தனுஷ்கோடி, சேதுபாலம், பாம்பன்பாலம் |
| செல்லும் வழி | தேவிப்பட்டினம் இராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவிலும், சிவகங்கையில் இருந்து 47 கி.மீ தொலைவிலும் உள்ளது. தேவிப்பட்டினத்திற்கு உச்சிப்புளி, கல்லுக்கடை, இராமேஸ்வரம், இராமநாதபுரம் போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 -12.30 முதல் மாலை 5.00-8.30 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 11 May 2018 |
| பார்வைகள் | 115 |
| பிடித்தவை | 0 |