வரலாற்றுச் சின்னம்

பூதக்குடி முருகன் கோயில்

பூதக்குடி முருகன் கோயில்
தொல்லியல் சின்னத்தின் பெயர் பூதக்குடி முருகன் கோயில்
அமைவிடம் பூதக்குடி
ஊர் பூதக்குடி
வட்டம் இலுப்பூர்
மாவட்டம் புதுக்கோட்டை
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் பிறகட்டுமானம்
விளக்கம்
கோயில், முருகன், செங்கல், கட்டுமானம், செங்கற் கோயில், தளி, நாயக்கர் காலம், பூதக்குடி, இலுப்பூர், புதுக்கோட்டை
பாதுகாக்கும்நிறுவனம் பூதக்குடி ஊராட்சி நிர்வாகம்
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் இவ்வூர் சிறிய கிராமமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள இக்கோயில் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. முன்புறம் செங்கல் கட்டுமானத்தால் ஆன மண்டபம் அமைந்துள்ளது. அதனையடுத்து உள்ளே சிறிய கற்றளி காணப்படுகிறது. அதன் கருவறையில் பிற்கால முருகன் சிற்பம் தன் துணைவியருடன் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் விமானம் ஸ்தூபி வட்டவடிவத்தில் செங்கல் கட்டுமானமாக அமைந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இது புதுக்கோட்டை நாயக்கர் கால கட்டுமானக் கோயிலாகும்.
ஒளிப்படம்எடுத்தவர் இலுப்பூர் வட்டாரத் தொல்லியல் களங்கள் - கல்குடி, கல்லுபட்டி, அரசகுடிப்பட்டி, காரைமேட்டுப்பட்டி
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் மதுரை கோ.சசிகலா
குறிச்சொற்கள்
சுருக்கம்
தமிழகத்தில் பரவலாக காணப்படும் காலத்தால் முந்திய செங்கல் தளிகளுள் இலுப்பூர் வட்டாரத்தில் உள்ள பூதக்குடி முருகன் கோயில் குறிப்பிடத்தக்கது. இக்கோயில் புதுக்கோட்டை நாயக்க மன்னர்களால் எடுப்பிக்கப்பட்டதாகும்.
பூதக்குடி முருகன் கோயில்
வரலாற்றுச் சின்னம்

பூதக்குடி முருகன் கோயில்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் பூதக்குடி ஊராட்சி நிர்வாகம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 17 Dec 2019
பார்வைகள் 77
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்