ஸ்வஸ்திக் கிணறு (மார்ப்பிடுகு கிணறு)
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | ஸ்வஸ்திக் கிணறு (மார்ப்பிடுகு கிணறு) |
|---|---|
| அமைவிடம் | திருவெள்ளறை |
| ஊர் | திருவெள்ளறை |
| வட்டம் | திருச்சி |
| மாவட்டம் | திருச்சி |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | தந்தி வர்மப் பல்லவ மன்னன் |
|
விளக்கம்
பல்லவ மன்னன் தந்தி வர்மன் காலத்தில் ஆலம்பாக்கிழான் விசைய நல்லுழான் தம்பி கம்பன் அரையன் இந்த ஸ்வஸ்திக வடிவக் கிணற்றினை எடுப்பித்தான். இங்குள்ள கல்வெட்டில் இச்செய்தி குறிப்பிடப்படுகிறது. மார்ப்பிடுகு பெருங்கிணறு என்று குறிப்பிடப்படும் இக்கிணறு கி.பி.13-ஆம் நூற்றாண்டில் போசள அரசன் வீரராமநாதன் காலத்தில் குடந்தை வாணிகன் உய்ய நெறி காட்டினான் என்பவனால் திருத்தியமைக்கப்பட்டது என்று இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.“ ஸ்வஸ்தி ஸ்ரீ பாரத்வாஜ கோத்திரத்தின் வழித்தோன்றிய பல்லவ திலத குலோத்பவன் தந்திவர்மர்க்கு யாண்டு நான்காவ தெடுத்துக் கொண்டு ஐந்தாவது முற்றுவித்தான் ஆலம்பாக்க விசெய நல்லூழான் தம்பி கம்பன் அரையன் திருவெள்ளரை தென்னூர் பெருங்கிணறு இதன் பியர் மார்ப்பிடுகு பெருங்கிணறு.’’ “ஸ்ரீ கண்டார் காணா உலகத்திற் காதல் செய்து நில்லாதேய் பண்டேய் பரமன் படைத்த நாள் பார்த்து நின்று நைய்யாதேய் தண்டால் மூப்பு வந்து உன்னைத் தளரச் செய்து நில்லாமுன் உண்டேல் உண்டுமிக்கது உலகமறிய வைம்மினேய்..“ என்று இந்த நிலையில்லா உலகத்தைப் பற்றி கூறி அறச்செயல்களை செய்வீர் எனக் கூறுகிறது இங்குள்ள மற்றொரு கல்வெட்டு. |
|
| பாதுகாக்கும்நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | திருப்பைஞ்ஞீலி, சமயபுரம், திருவானைக்கா |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | திரு. கிரிஷ் கோபிநாத், திரு.பராந்தகன் தமிழ்ச்செல்வம் |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
தந்தி வர்மப் பல்லவ மன்னன் காலத்தில் ஆலம்பாக்கிழான் விசைய நல்லுழான் தம்பி கம்பன் அரையன் இந்த ஸ்வஸ்திக வடிவக் கிணற்றினை எடுப்பித்தான். கி.பி.13-ஆம் நூற்றாண்டில் போசள அரசன் வீரராமநாதன் காலத்தில் குடந்தை வாணிகன் உய்ய நெறி காட்டினான் என்பவன் இக்கிணற்றினை திருத்தியமைத்தான் என்று இங்குள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது. |
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
20 Files
-
TVA_MON_00028_திருவெள...
-
TVA_MON_00028_திருவெள...
-
TVA_MON_00028_திருவெள...
-
TVA_MON_00028_திருவெள...
-
TVA_MON_00028_திருவெள...
-
TVA_MON_00028_திருவெள...
-
TVA_MON_00028_திருவெள...
-
TVA_MON_00028_திருவெள...
-
TVA_MON_00028_திருவெள...
-
TVA_MON_00028_திருவெள...
-
TVA_MON_00028_திருவெள...
-
TVA_MON_00028_திருவெள...
-
TVA_MON_00028_திருவெள...
-
TVA_MON_00028_திருவெள...
-
TVA_MON_00028_திருவெள...
-
TVA_MON_00028_திருவெள...
-
TVA_MON_00028_திருவெள...
-
TVA_MON_00028_திருவெள...
-
TVA_MON_00028_திருவெள...
-
TVA_MON_00028_திருவெள...
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 01 Feb 2019 |
| பார்வைகள் | 132 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |