இலங்கை அரசன் கல்லறை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | இலங்கை அரசன் கல்லறை |
|---|---|
| அமைவிடம் | ஸ்ரீவிக்கிரமராச சிங்கன் நினைவு முத்து மண்டபம் |
| ஊர் | வேலூர் |
| வட்டம் | வேலூர் |
| மாவட்டம் | வேலூர் |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.1832 |
|
விளக்கம்
ஸ்ரீ விக்கிரம ராச சிங்கன் (1780 - ஜனவரி 30, 1832) இலங்கையின் கண்டி அரசை ஆண்ட கடைசி மன்னன் ஆவான். முன்னைய அரசன் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் பிள்ளைகள் இன்றி இறந்தபோது இவன் சிம்மாசனம் ஏறினான். இறுதியாகக் கண்டிப் போரில் 1815ல்பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட சிறை பிடிக்கப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டான். பின்பு 1832-இல் மரணமடைந்தான். அம்மன்னனின் கல்லறை நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்படுகிறது. |
|
| பாதுகாக்கும்நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | வேலூர் அருங்காட்சியகம், வேலூர் கோட்டை, ஜலகண்டேசுவர் கோயில் |
| ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
விக்கிரமராச சிங்கன், இலங்கையில் சிறப்பாக ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னன். ஆங்கில அரசு இம்மன்னன் மீது 4 முறை போர் தொடுத்து, இறுதியில் மன்னரும் பட்டத்தரசிகளும் கப்பல் மூலம் தமிழகம் கொண்டு வரப்பட்டு, 1816-ல் வேலூர் கோட்டையில் உள்ள (தற்போதைய பதிவு அலுவலகம்) அறையில் 16 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டனர். விக்கிரமராச சிங்கன் 30-1-1832 -ல் மரணம் அடைந்து, அவரது கல்லறை இங்கே அமைக்கப்பட்டுள்ளது. 1843 -ல் மரணம் அடைந்த மகன் ரங்கராசா கல்லறையும், மனைவி ராசலட்சுமி தேவி கல்லறையும், மன்னரின் பேரன் ரசிம்மராசா கல்லறையும் அருகில் உள்ளன. 4,5,6 -வது கல்லறைகள் மற்ற மனைவிகளுடையது. 7 -வது கல்லறை விக்கிரமராச சிங்கரின் பட்டத்தரசி சாவித்திரி தேவியுடையது ஆகும். |
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
6 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Sep 2018 |
| பார்வைகள் | 180 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |