வரலாற்றுச் சின்னம்
மகிபாலன்பட்டி குடைவரை
தொல்லியல் சின்னத்தின் பெயர் மகிபாலன்பட்டி குடைவரை
அமைவிடம் ஊருக்குப் புறத்தேயுள்ள குன்று ஒன்றின் மேற்கு நோக்கிய சரிவு
ஊர் மகிபாலன்பட்டி
வட்டம் திருப்பத்தூர்
மாவட்டம் சிவகங்கை
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
கருவறையின் வெளிப்பகுதி முகப்பு போன்று அமைக்கப்பட்டு உள்சுவர் சிறிது பின் தள்ளி இக்குடைவரை அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் உள்ளே தாய்ப்பாறையில் குடையப்பட்ட இலிங்கம் சதுர வடிவ ஆவுடையார் கொண்டு விளங்குகிறது. அபிஷேக நீர் செல்ல கால் ஒன்றும் வெட்டப்பட்டுள்ளது இக்குடைவரை அமைந்துள்ள இதே பாறையில் வடக்குப்பக்கம் பிள்ளையார் சிற்பம் ஒன்று கோட்ட தெய்வமாக வடிக்கப்பட்டுள்ளது. இதன் முன் பகுதியில் பிற்காலத்தில் சிறு மண்டபம் ஒன்றும் கட்டி உள்ளனர். பிள்ளையாரின் நான்கு கைகளில் வலப்புறப் பின்கையில் குறுந்தடியும் இடப்புறம் கரும்பும் முன்னிருகைகளில் இடக்கை தொடைமீதும் வலக்கை உடைந்தும் காணப்படுகின்றன. வலம் வந்துள்ள துதிக்கையில் மோதகம் காணப்படுகிறது தூண்களற்ற இக்குடைவரைக்கோயில் மிக எளிய அமைப்பைப் பெற்ற பாண்டியர் குடைவரைக் கோயிலாகும். இக்குடைவரையின் முகப்புச்சுவரில் பிற்காலப் பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு காணப்படுகிறது. இது இம்மன்னனின் 10 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். பூங்குன்ற நாட்டைச் சார்ந்த பூங்குன்றம் என்னும் ஊரில் அமைந்துள்ள இத்திருக்கோயிலின் இறைவனுக்கு நிவந்தங்கள் அளித்த செய்தி இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாக்கும்நிறுவனம் மத்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் மகிபாலன்பட்டி சிவன் கோயில், விஷ்ணு கோயில், சமணர் கோயில்
ஒளிப்படம்எடுத்தவர் சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
சுருக்கம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து நெற்குப்பை செல்லும் பாதையில் பதின்மூன்று கி.மீ. தொலைவில் மகிபாலன்பட்டி அமைந்துள்ளது. இவ்வூருக்கு வெளியே 1 கி.மீ. தொலைவில் சிறிய குன்றுப்பகுதி உள்ளது. இக்குன்றின் மேற்குச் சரிவில் சிறியதொரு குடைவரைக் கோயில் மேற்கு நோக்கிய நிலையில் காணப்படுகிறது. கருவறையை மட்டுமே கொண்டுள்ள இக்குடைவரைக் கோயில் வாயிலின் இருபக்கங்களிலும் இரண்டு அரைத்தூண்கள் பக்கத்திற்கு இரண்டாகக் குடையப்பட்டுள்ளன இக்குடைவரைக் கோயில் காண்பதற்கு குடிசைக் கோயில் போன்ற அமைப்பைப் பெற்றுத் திகழ்கிறது. அதற்கு ஏற்றவாறு கூரைப்பகுதியில் மழைநீர் விழாதவாறு பள்ளங்கள் வெட்டப்பட்டு உள்ளன. மகிபாலன்பட்டிக் குடைவரை அமைப்பில் மலையக்கோயில் அமைப்பை பெரிதும் ஒத்துள்ளது. இங்குள்ள கல்வெட்டு பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சார்ந்ததெனினும் இக்குடைவறை 9-ம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்க வாய்ப்பு உண்டு. சங்ககாலப் புலவர் கணியூர் பூங்குன்றனார் பிறந்த ஊர் இவ்வூரே என அறிஞர்கள் கருதுகின்றனர். இப்புலவரே உலகமே போற்றிப் புகழும் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற பொய்யா மொழியைப் புகழ்ந்துரைத்த புலவர் ஆவார்.
குறிப்புதவிகள்
மகிபாலன்பட்டி குடைவரை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    3 Files

  • TVA_MON_00111/TVA_MON_00111_சி...

  • TVA_MON_00111/TVA_MON_00111_சி...

  • TVA_MON_00111/TVA_MON_00111_சி...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் மத்தியத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 91
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்