ஆரணி ஜாகிர் மாளிகை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | ஆரணி ஜாகிர் மாளிகை |
|---|---|
| அமைவிடம் | சீனிவாச யுத்தியா வனம் |
| ஊர் | சிறுமூர் மதுரா SU வனம் (சீனிவாச யுத்தியா வனம்) |
| வட்டம் | ஆரணி |
| மாவட்டம் | வேலூர் |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.1860 |
|
விளக்கம்
வேலூரில் இருந்து சுமார் 35 கி.மீ. ஆரணி செல்லும் சாலையில், ஆதிமலை பட்டு கிராமத்தை கடந்த பின் இடதுபுறம் திரும்பி பூசிமலை குப்பம் கிராமத்தின் வழியே ஆள் ஆரவாரம் இல்லாத தார் சாலையில் நேராக 7 கி.மீ. உள்ளே சென்றால் இந்த மாளிகையின் முன்பு சாலை முடிகின்றது. சிறுமூர் மதுரா SU வனம் (சீனிவாச யுத்தியா வனம்) ஊராட்சியில் இந்த ஆரணி ஜாகிர் மாளிகை அமைந்துள்ளது. கண்ணாடி மாளிகை, வசந்த மாளிகை, வேட்டை மாளிகை, French Castle என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த மாளிகைக்கு கட்டிய காலத்தில் வைத்த பெயர் Shooting Box. சுற்றிலும் மலை சூழ்ந்த இயற்கை எழில் நிறைந்த இடத்தில், அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே கட்டப்பட்ட பிரம்மாண்ட மாளிகை. ஆரணி ஜாகிர் சீனிவாச ராவ் தன் ஆங்கிலேய காதலிக்காக கட்டிய அரண்மனை என கூறப்படுகின்றது. 1860-ல் கட்டப்பட்ட இந்த மாளிகையின் வரலாறு பற்றிய விபரங்கள் ஆய்வுக்கு உரியவை. ஆங்கிலேயர்களுக்கு உரிய கலை நயத்துடனும், கட்டப்பட்ட காலத்தில், கலர் கண்ணாடிகளாலும், வண்ண சுவர் காகிதத்தாலும், அழகிய பளிங்கு தரைகளும், சுவர்கள் முழுவதும் சுண்ணாம்பு பூசி வழுவழுப்பாக இருந்துள்ளது. மூன்று அடுக்கு மாளிகை, உள்ளே, வெளியே படிகள், தரைத்தளத்தில் விசாலமான நான்கு அறைகள், எல்லா அறைகளிலும் கனப்பு அடுப்பு, புகை போக்கிகள், குளியல் அறைகள், வெளியே அமைக்கப்பட்ட வார்ப்புத் தூண்கள் உட்புறம் வழியாக மேல் தளத்தில் உள்ள நீர் தரையில் வடியும் அமைப்பு மற்றும் இந்த மாளிகை அருகே நீச்சல் குளம், பணி ஆட்கள் தங்குமிடம், சமையல் கூடம், தூது புறாக்களுக்கு தனி இடம் என ரசித்துக் கட்டியுள்ளனர். ஜாகிர் காலத்தில் வேட்டைக்கும், ஓய்வுக்காக தங்கிய விருந்தினர்களால் குழுமப்பட்டு இருந்துள்ளது. |
|
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | பூசிமலைக்குப்பம் தனிக்காடு, மோத்தகல் நடுகல், காவனூர் காடுகள் |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
மராத்திய மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்ட சத்திய விஜய நகரம் அரண்மனை பிற்காலத்தில் அவர்கள் வழிவந்தவர்களால் ஆளப்பட்டுவந்தது. சீனுவாசராவ் சாகேப் என்பவரால் இவ்வரண்மனை கட்டப்பட்டது. இதில் வாழ்ந்த ஜாகிர்தார்கள் அக்காலத்தில் இப்பகுதியின் தலைவராக பல கிராமங்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்தனர். இங்கு இவர்கள் கட்டிய அழகிய அரண்மனை தற்போது அரசின் பயிற்சி மையமாக திகழ்கிறது. ஆரணி ஜாகிர் தனது மனைவிக்கு கட்டிய கண்ணாடி மாளிகை பூசிமலைக்குப்பம் என்ற இடத்தில் உள்ளது. |
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
20 Files
-
TVA_MON_00031_ஆரணி-ஜா...
-
TVA_MON_00031_ஆரணி-ஜா...
-
TVA_MON_00031_ஆரணி-ஜா...
-
TVA_MON_00031_ஆரணி-ஜா...
-
TVA_MON_00031_ஆரணி-ஜா...
-
TVA_MON_00031_ஆரணி-ஜா...
-
TVA_MON_00031_ஆரணி-ஜா...
-
TVA_MON_00031_ஆரணி-ஜா...
-
TVA_MON_00031_ஆரணி-ஜா...
-
TVA_MON_00031_ஆரணி-ஜா...
-
TVA_MON_00031_ஆரணி-ஜா...
-
TVA_MON_00031_ஆரணி-ஜா...
-
TVA_MON_00031_ஆரணி-ஜா...
-
TVA_MON_00031_ஆரணி-ஜா...
-
TVA_MON_00031_ஆரணி-ஜா...
-
TVA_MON_00031_ஆரணி-ஜா...
-
TVA_MON_00031_ஆரணி-ஜா...
-
TVA_MON_00031_ஆரணி-ஜா...
-
TVA_MON_00031_ஆரணி-ஜா...
-
TVA_MON_00031_ஆரணி-ஜா...
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 01 Feb 2019 |
| பார்வைகள் | 231 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |