வரலாற்றுச் சின்னம்
அரகண்ட நல்லூர் குடைவரைக் கோயில்
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | அரகண்ட நல்லூர் குடைவரைக் கோயில் |
|---|---|
| அமைவிடம் | அரகண்ட நல்லூர் குடைவரை |
| ஊர் | அரகண்டநல்லூர் |
| வட்டம் | திருக்கோவிலூர் |
| மாவட்டம் | விழுப்புரம் |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
அரகண்டநல்லூர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஊர். இங்கு முற்றுப்பெறாத குடைவரைக் கோயில் ஒன்று உள்ளது. மிகப் பெரிய பாறையில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்ட இக்குடைவரையின் பரவலான பாறைப் பகுதியில் கோபுரம் ஒன்றும் மதிற்சுவருடன் கூடிய ஒப்பொருவருமில்லா நாயனார் ஆலயம் மற்றும் பொன்னியம்மன் கோயிலும் உள்ளன. பொன்னியம்மன் என்பது சமண யக்க்ஷியாக இருந்திருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். குடைவரையின் முன்புறம் இயற்கையாக அமைந்துள்ள நீர்நிலை ஒன்று ஆய்குளம் என்றழைக்கப்படுகிறது. குடைவரைக்கோயில் பாறையின் அடிப்பகுதியிலேயே குடையப் பட்டுள்ளது. இக்குடைவரையை அடைய தெற்கிலிருந்து உள்ள கணவாய் போன்ற குறுகிய வழியில் செல்லவேண்டும். குடைவரை மண்டபத்தினுள் வரிசைக்கு நான்கு தூண்கள் வீதம் இரண்டு வரிசைகளில் மொத்தம் எட்டு பெரிய சதுரமான தூண்கள் அமைக்கப் பட்டுள்ளன. அவற்றிற்கு நேராக இருபுறமும் சுவரையொட்டி அரைத் தூண்களும் உள்ளன. குடைவரையின் பின்புறச் சுவரில் சதுரமாக ஐந்து கருவறைகள் அமைக்க குடைவுவேலை தொடங்கப்பட்டு அரைகுறையாகக் கைவிடப்பட்டுள்ளது. பாறையின் முகப்பும் சரிசெய்யப்படாமல் உள்ளது. மேல்விதானம் மற்றும் சுவர்கள் யாவும் முற்றுப் பெறாத நிலையிலேயே காணப்படுகின்றன. தளவரிசை செங்கல், மண் ஆகியவற்றினால் நிரப்பப்பட்டுள்ளது. சமணர் வசிப்பிடத்தில் குடைவரைக் கோயில் அமைக்க முயற்சி செய்திருப்பதிலிருந்தும் அதன் பெரிய அளவையும் கொண்டு இது மகேந்திரவர்மனால் திட்டமிடப்பட்டு எக்காரணத்தினாலோ கைவிடப்பட்டது என்பதை ஊகிக்கலாம்
|
|
| பாதுகாக்கும்நிறுவனம் | மத்தியத் தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோயில், பச்சையம்மன் கோயில் |
| ஒளிப்படம்எடுத்தவர் | சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்தில் அமைந்துள்ள அரகண்டநல்லூர் அமைந்துள்ளது. இங்கு முற்றுப்பெறாத குடைவரைக் கோயில் ஒன்று உள்ளது. மிகப் பெரிய பாறையில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்ட இக்குடைவரையின் பரவலான பாறைப் பகுதியில் கோபுரம் ஒன்றும் மதிற்சுவருடன் கூடிய ஒப்பொருவருமில்லா நாயனார் ஆலயம் மற்றும் பொன்னியம்மன் கோயிலும் உள்ளன.
|
|
|
குறிப்புதவிகள்
தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ
|
|
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | மத்தியத் தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 81 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |