வரலாற்றுச் சின்னம்
ஜுவரஹரேசுவரர் குடைவரை
தொல்லியல் சின்னத்தின் பெயர் ஜுவரஹரேசுவரர் குடைவரை
அமைவிடம் தலை அருவி சிங்கம் சுனை
ஊர் நார்த்தாமலை
வட்டம் சித்தன்னவாசல்
மாவட்டம் புதுக்கோட்டை
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
நார்த்தா மலையின் சரிவுப் பகுதியில் வடக்காக இரண்டு சுனைகள் இருப்பதைக் காணலாம். சிறிய சுனையினை “தலையருவிசிங்கம் சுனை” என அழைக்கின்றனர். ஒரு குடைவரைச் சிவாலயம் இச்சுனையினுள் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் பெய்யும் மழைநீர் இச்சுனையினை நிரப்பி நிற்கும். அந்நீர் சிவகங்கையாகப் பாவிக்கப்பெறுவதாகும். அச்சுனை அருகே கி.பி. 1857-ஆம் ஆண்டு பொறிக்கப்பெற்ற தமிழ் கிரந்தம் கலந்த கல்வெட்டுப் பொறிப்பு ஒன்று காணப்பெறுகின்றது.
பாதுகாக்கும்நிறுவனம் மத்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் நார்த்தாமலை விசயாலயச் சோழீச்சுவரம், பழியிலி ஈச்சுரம், திருமால் குடைவரை
ஒளிப்படம்எடுத்தவர் க.த.காந்திராஜன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
சுருக்கம்
நார்த்தாமலையில் விசயாலய சோழீச்சுரம் கோயிலுக்கு செல்லும் பாதையில் தலை அருவி சிங்கம் சுனை அமைந்துள்ளது. 30 அடி ஆழத்தில் ஒரு சிவன் குடைவரைக் கோயில் உள்ளது. இக்குடைவரைக் கோயில் ஜுவரகரேஸ்வரர் குடைவரை என்றழைக்கப்படுகிறது. சுனைநீரின் நடுவே அமைந்திருப்பதாய் இக்குடைவரை வெட்டப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜுவரஹரேசுவரர் குடைவரை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • TVA_MON_00081/TVA_MON_00081_நா...

  • TVA_MON_00081/TVA_MON_00081_நா...

  • TVA_MON_00081/TVA_MON_00081_நா...

  • TVA_MON_00081/TVA_MON_00081_நா...

  • TVA_MON_00081/TVA_MON_00081_நா...

  • TVA_MON_00081/TVA_MON_00081_நா...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் மத்தியத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 76
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்