உமையாண்டார் கோயில்
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | உமையாண்டார் கோயில் |
|---|---|
| அமைவிடம் | தென்பரங்குன்றம் |
| ஊர் | திருப்பரங்குன்றம் |
| வட்டம் | திருமங்கலம் |
| மாவட்டம் | மதுரை |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
மதுரையின் திருப்பரங்குன்றம் மலையின் தெற்குப்பகுதி தென்பரங்குன்றம் என அழைக்கப்படுகிறது. தென்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள குடைவரை உமையாண்டார் கோயில் என்று தற்போது வழங்கப்படுகிறது. இக்குடைவரைக் கோயில் முதலில் சமணக் குடைவரையாக இருந்து பின் சைவக் கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இக்குடைவரை கி.பி.8-9-ஆம் நூற்றாண்டளவில் மதுரையில் தங்கியிருந்த சமணர்களால் உருவாக்கம் பெற்றது. பின்பு பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் சமணம் வீழ்ச்சிக்குப் பின், கி.பி.1223இல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்குடைவரைக் கோயில் ஒரு சிவன் கோயிலாக மாற்றம் கண்டுள்ளது எனலாம். இக்குடைவரை கருவறை மற்றும் நீண்ட முன் மண்டபத்தைக் கொண்டுள்ளது. மண்டபத்தின் சுவர்களில் நடராசர், முருகன் இக்கோயிலைச் சிவன் கோயிலாக மாற்றுவதில் பிரசன்ன தேவர் என்னும் சைவத்துறவி முக்கியப் பங்காற்றியுள்ளார் என்ற செய்தியும் கல்வெட்டின் வழி அறிய முடிகின்றது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் புளிங்குன்றூரை இன்று உள்ள வேடர் புளியங்குளம் என்ற ஊராகக் கொள்ளலாம். சுந்தர பாண்டிய ஈஸ்வரம் என்று பெயர் மாற்றம் பெற்று அதன் பராமரிப்புக்காகப் புளிங்குன்றூர் என்னும் கிராமத்தை மன்னன் தானமளித்த செய்தி இக்கோயிலிலுள்ள குடைவரையின் கிழக்குச் சுவரில் காணப்படும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. அசோகமரத்தின் கீழ் அர்த்தநாரீசுவரர் ஆகிய அம்மையப்பர் விடை வாகனத்துடன் நிற்கும் காட்சி புடைப்புச் சிற்பமாக கருவறையில் செதுக்கப்பட்டுள்ளது.குடைவரைக் கோவிலின் வலப்பக்கம், நடராஜனும், சிவகாமியும் நடனம் ஆடியபடி சிற்பங்கள் காணப்படுகிறது. இவ்விரண்டு சிற்பங்களும் சேதமடைந்துள்ளன. நடராஜனின் உருவச் சிலைக்கு மேலே விநாயகர், சுப்பிரமணியர் சிற்பங்கள் எழிலுற விளங்குகின்றன. மேலும் சைவ சமயத்தை சேர்ந்த திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மற்றும் சுந்தரர் சிற்பங்களும் காணக் கிடைக்கிறது. இடப்பக்கமாக, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியரின் புடைப்புச் சிற்பம் விளங்குகிறது. கோயிலின் வெளிப்புறத்தில் தேவார மூவரின் சிற்பங்களும் புடைப்புகளாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் முனிவர்கள், கணபதி, பைரவர் ஆகிய உருவங்களும் புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. பைரவரின் உருவத்தை நோக்குகையில் சமணத் தீர்த்தங்கரரின் நின்ற நிலை உருவத்தை ஒத்துள்ளது இங்கு நோக்கத்தக்கது. |
|
| பாதுகாக்கும்நிறுவனம் | இந்தியத் தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | திருப்பரங்குன்றம் குடைவரை, திருப்பரங்குன்றம் தமிழ்-பிராமி கல்வெட்டுகள், சமண குகைத்தளம், மலை மேலுள்ள தர்கா |
| ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
தென்பரங்குன்றம் என்பது இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் மதுரையைச் சேர்ந்த திருப்பரங்குன்றம் என்னும் ஊரைச் சேர்ந்த மலையாகும். இவ்வூர் மதுரைக்கு தென்மேற்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையானது ஆகும். திருப்பரங்குன்ற மலையில கிரிவலம் வரும் வழியில், அதாவது மலையின் நேர் பின் பக்கத்தில் தென்பரங்குன்றம் அமைந்துள்ளது. தென்பரங்குன்ற மலையில் சமணர் குடை வரை கோவில் உள்ளது. இம்மலை இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் பராமரிக்கப்படுகிறது. 2300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலையில் சமண துறவிகள் வாழ்ந்தமைக்கான அடையாளமாக கற்படுக்கைகளும், தமிழ் பிராமி கல்வெட்டுகளும் உள்ளன. தென்பரங்குன்ற மலையில் கி.பி ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த சமணர் தீர்த்தங்கரர் சிற்பங்களும், அர்த்தநாரீஸ்வரருடைய குடை வரை கோவிலும், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனுடைய மெய்கீர்த்தி கல்வெட்டுகளும் காணப்படுகிறது. குடைவரைக் கோவிலின் வலப்பக்கம், நடராஜனும், சிவகாமியும் நடனம் ஆடியபடி சிற்பங்கள் காணப்படுகிறது. இவ்விரண்டு சிற்பங்களும் சேதமடைந்துள்ளன. நடராஜனின் உருவச் சிலைக்கு மேலே விநாயகர், சுப்பிரமணியர் சிற்பங்கள் எழிலுற விளங்குகின்றன. மேலும் சைவ சமயத்தை சேர்ந்த திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மற்றும் சுந்தரர் சிற்பங்களும் காணக் கிடைக்கிறது. இடப்பக்கமாக, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியரின் புடைப்புச் சிற்பம் விளங்குகிறது. இக்குடை வரை கோவில் அமைந்த காலம் கி.பி. முதல் நூற்றாண்டு ஆகும்.இக்குடை வரை கோவிலில் மூன்று பெரிய தூண்கள் உள்ளன. இக்கோவில் உள்ளே இடப்புறம் அமைந்துள்ள தனிச் சந்நதியில் அழகான கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், கிழக்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. தெற்கு திசையைப் பார்த்த வண்ணம், மூலவரான தில்லைக் கூத்தனின் திருவுருவச் சிலை பாதி சிதைந்த நிலையில் காணப்படுகின்றது. கல்வெட்டுச் செய்திகளின்படி, இது உமையாண்டாள் கோவில் என அழைக்கப்படுகிறது. இங்கு இரு கல்வெட்டுகள் காணப்படுகிறது.அவற்றில் ஒன்று கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டில் மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழநாட்டின் மீது படையெடுத்து, அந்நாட்டை வென்று பாண்டிய நாட்டு ஆட்சி எல்லையை விரிவுபடுத்தியதைக் குறிக்கும் விதமாக, அந்த மெய்க்கீர்த்தி கல்வெட்டு அமைந்துள்ளது. |
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
29 Files
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
-
TVA_MON_00009_தென்பரங...
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | இந்தியத் தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 05 Jun 2017 |
| பார்வைகள் | 91 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 2 |