Back
வரலாற்றுச் சின்னம்
விளாப்பாக்கம் சமணக் குடைவரைக் கோயில்
தொல்லியல் சின்னத்தின் பெயர் விளாப்பாக்கம் சமணக் குடைவரைக் கோயில்
அமைவிடம் பஞ்சபாண்டவர் மலை
ஊர் விளாப்பாக்கம்
வட்டம் ஆற்காடு
மாவட்டம் வேலூர்
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.10-நூற்றாண்டு
விளக்கம்

          பல்லவ பாணியில் குடையப்பட்ட மிகப்பெரிய குடைவரைக் கோயில். இந்த கிழக்கு முகம் குகை ஒரு பெரிய மலை அடிவாரத்தில் தோண்டியெடுக்கப்பட்டது. இந்தக் குகைக் கோபுரங்கள் வரிசையாக பன்னிரண்டு தூண்களால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தூண்கள் மேல்மட்டத்தில் ஒரே சதுரமாக இருக்கும். தூண்கள் மற்றும் விமானங்கள் மேலே வளைந்த கோள்களும் உள்ளன. பக்க சுவர்கள் சதுர வடிவ செதுக்கப்பட்ட தொகுதிகள் கொண்டவை. இங்கே உள்ள கல்வெட்டுப்படி, இந்த மலையை திருப்பன்மலை என குறிப்பிடப்படுகிறது,

           யக்ஷி, நாகநதி மற்றும் ஜைன தீர்த்தங்கர் ஆதிநாதர் பற்றிய குறிப்புகள் உள்ளன. யக்ஷியின் உருவம் ஒரு பெரிய பாறையில் நீர் உள்ளடக்கிய குளம் அருகில் உள்ளது. குகையில் சமண படுக்கைகள் வெட்டப்பட்டடுள்ளன, யக்ஷி ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பார், யக்ஷியைச் சுற்றி நான்கு பேர் உள்ளனர். யோகநிலையில்அமர்ந்திருக்கும் சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று பாறை மேல் காணப்படுகிறது. ஒரே பாறையில் தெற்கு முகத்தில் இரண்டு செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள். ஆடையற்ற சமணர் உருவம் மற்றும் ஒரு விலங்கு. 17ம் நூற்றாண்டில் இங்கே மலை மீது தங்கிய முஸ்லீம் துறவி குடும்ப கல்லறைகளும் அமைந்துள்ளன. பெரிய பாறையில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. பல்லவ மன்னன் நந்திவர்மன் மற்றும் முதலாம் இராஜராஜ சோழன் ஆகிய மன்னர்கள் இங்கே வசித்த சமணத் துறவிகளுக்கு கொடையளித்துள்ளனர்.

பாதுகாக்கும்நிறுவனம் மத்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் ஆற்காடு அகழ்வைப்பகம், ஆற்காடு நவாபு கோட்டை, அப்துல்லாபுரம் அரண்மனை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் திரு. சரவணன் ராஜா
குறிச்சொற்கள்
சுருக்கம்

          ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலும், வேலூர் நகரிலிருந்து 30 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது பஞ்சபாண்டவர் மலை. ஆற்காடு மற்றும் கண்ணமங்கலம் இடையே நெடுஞ்சாலை வழியாக உள்ள ஒரு சிறிய கிராமம் விளாப்பாக்கம். இந்த மலைப்பகுதி 8 ஆம் மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஒரு செழுமையான சமண மையமாக திகழ்ந்துள்ளது. இந்த சமணக் குடைவரைக் கோவில், சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளுடன் கூடியதாக  இயற்கை குகைகளாய் மலை மேல் அமைந்துள்ளது.

விளாப்பாக்கம் சமணக் குடைவரைக் கோயில்
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    12 Files

  • TVA_MON_00054_விளாப்ப...

  • TVA_MON_00054_விளாப்ப...

  • TVA_MON_00054_விளாப்ப...

  • TVA_MON_00054_விளாப்ப...

  • TVA_MON_00054_விளாப்ப...

  • TVA_MON_00054_விளாப்ப...

  • TVA_MON_00054_விளாப்ப...

  • TVA_MON_00054_விளாப்ப...

  • TVA_MON_00054_விளாப்ப...

  • TVA_MON_00054_விளாப்ப...

  • TVA_MON_00054_விளாப்ப...

  • TVA_MON_00054_விளாப்ப...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் மத்தியத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 14 Feb 2019
பார்வைகள் 166
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்