வரலாற்றுச் சின்னம்
திருக்கோளக்குடி குடைவரை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | திருக்கோளக்குடி குடைவரை |
|---|---|
| அமைவிடம் | திருக்கோளக்குடிக் குடைவரை சிவன் கோயில் |
| ஊர் | திருக்கோலக்குடி |
| வட்டம் | திருக்கோலக்குடி |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
இக்குடைவரை முகப்பு, முகமண்டபம், உள் மண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டிலங்கும் இக்குடைவரையின் முகப்பில் இரண்டு தூண்களும் பக்கச்சுவர்களை ஒட்டி இரு அரைத்தூண்களும் காணப்படுகின்றன. தூண்கள் தாமரை இதழ்கள் பெற்ற சதுரங்களையும் நடுவில் எட்டுப் பட்டையுடனும் காட்சியளிக்கின்றன. தூண்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தூண்கள் போதிகைகள் பெற்று விரிந்து உத்திரத்துடன் இணைகின்றன. இவற்றில் தரங்க அமைப்பு காணப்படுகிறது. இதனை அடுத்து முகமண்டபம் உள்ளது. முகப்பில் உள்ளது போன்று இரண்டாவது வரிசைத் தூண்கள் இங்கும் உள்ளன. போதிகையில் தரங்க அமைப்பு இவ்வரிசையில் காட்டப்படவில்லை. இம்மண்டபத்தின் நடுவில் தாய்ப்பாறையில் உருவாக்கப்பட்ட நந்தியின் சிற்பம் காணப்படுகிறது. இம்மண்டபத்தின் தெற்கிலும் வடக்கிலும் முனிவர்கள் இருவர் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகின்றனர். இவர்கள், அகத்தியர் மற்றும் அவரது சீடர் புலத்தியர் எனக் கூறுகின்றனர். எழிலுடன் கூடிய விசிறி மடிப்பு ஆடைகளுடன் இவர்கள் காட்சியளிக்கின்றனர். கருவறையின் வெளிச்சுவரில் ஆறு அரைத்தூண்கள் காணப்படுகின்றன. கருவறையின் உள்ளே மூலப்பாறையில் செதுக்கிய இலிங்கம் காணப்படுகிறது. கருவறைக்கு வடக்கிலும் மேலும் ஓர் இலிங்கமும் அதனை அடுத்து சப்தமாதர்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன. இவர்களுடன் இடபவாகனர் போன்று அமைப்புடைய சிற்பமும் காணப்படுகிறது. காளையுடன் இவர் காணப்படினும், ஆலமர் செல்வரின் ஜடாபாரத்தைப் பெற்றுள்ள படியால் இவர் ஆலமர் செல்வராக இருத்தல் கூடும்.
|
|
| பாதுகாக்கும்நிறுவனம் | மத்தியத் தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | திருக்கோளபுரீசுவரர் கோயில், முருகன் கோயில் |
| ஒளிப்படம்எடுத்தவர் | சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| குறிச்சொற்கள் |
|
|
சுருக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர். திருக்களக்குடி என்றும் கூறப்படும். புதுக்கோட்டை - ராங்கியம் மிதிலைப்பட்டி வழியாகவும் இவ்வூரை அடையலாம். காரைக்குடியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரின் குன்றுத் தொடர்களில் இயற்கையான குகைகள் பல உள்ளன. இங்குள்ள சிவாலயம் பாதாளம், மத்யமம், சுவர்க்கம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பாதாளத்தில் சத்யாவாகீசுவரரும் மரகதவல்லித் தாயாரும் மத்யமத்தில் சிவதர்மபுரீசுவரரும் சிவகாமியும் சுவர்க்கத்தில் திருக்கோளநாதரும் ஆத்மநாயகி அம்மையும் குடிகொண்டுள்ளனர். நெசவாளர்களின் மூலக் கடவுளாக இவர் விளங்குவதால் "கைக்கோலநாதர்" என்றும் இவர் கூறப்படுகிறார். மலைக்குச் செல்கின்ற வழியில் அமர்ந்த நிலையில் பாறையின் புடைப்புச் சிற்பமாய் விநாயகர் காணப்படுகிறார். இக்குடைவரை முற்காலப் பாண்டியர் கலைப்பாணியைக் கொண்டு விளங்குவதால் இதன் காலம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டாகக் கொள்ளலாம். பிற்கால இணைப்புகளால் இக்குடைவரையின் பழமை மாறிப் பெரிதும் மறைக்கப்பட்டுள்ளது. மலைச்சரிவின் கிழக்கு நோக்கிய நிலையில் குடைவரை ஒன்று காணப்படுகிறது. இக்குடைவரை பாண்டியர் காலக் குடைவரைக் கோயில்களில் மிகப் பெரியதாக விளங்குகிறது. இக்குடைவரை முற்காலப் பாண்டியர் கலைப்பாணியைக் கொண்டு விளங்குவதால் இதன் காலம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டாகக் கொள்ளலாம். பிற்கால இணைப்புகளால் இக்குடைவரையின் பழமை மாறிப் பெரிதும் மறைக்கப்பட்டுள்ளது.
|
|
|
குறிப்புதவிகள்
தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ
|
|
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | மத்தியத் தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 100 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |