Back
வழிபாட்டுத் தலம்
திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில்
வேறு பெயர்கள் திருநாவலீஸ்வரர், பக்தஜனேஸ்வரர், இராஜாதித்த ஈஸ்வரமுடையார், திருத்தொண்டீசுவரர்
ஊர் திருநாவலூர்
வட்டம் உளுந்தூர்பேட்டை
மாவட்டம் விழுப்புரம்
உட்பிரிவு 1
மூலவர் பெயர் பக்தஜனேஸ்வரர், திருநாவலீசுவரர், ஜம்புநாதேசுவரர்
தாயார் / அம்மன் பெயர் சுந்தரநாயகி அம்மை, மனோன்மணி அம்மை
தலமரம் நாவல் மரம்
திருக்குளம் / ஆறு கோமுகி தீர்த்தம், கருடதீர்த்தம், கெடிலநதி
ஆகமம் காமீகம்
வழிபாடு காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
திருவிழாக்கள் ஆவணி மாதம் சுந்தரர் ஜனன விழா, ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று சுந்தரர் குருபூஜை விழா, சித்திரை மாதம் 15 நாட்கள் தேர்த்திருவிழா, ஆடிமாதம் பூரம் நாளன்று மனோன்மணியம்மைக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பெறும்.
காலம் / ஆட்சியாளர் கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு / முதலாம் பராந்தகன்
கல்வெட்டு / செப்பேடு முதலாம் பராந்தகச் சோழனின் மகன் இராசாதித்தன் என்ற சோழ இளவரசன் இப்பகுதியில் சோழப்படைகளை நிர்வகித்து வந்தான். இப்பகுதி மௌலி கிராமம் என்று பண்டு அழைக்கப்பட்டு இன்று கிராமம் என்று அழைக்கப்படுகிறது. மௌலி கிராமம் திருநாவலூருக்கு அருகில் அமைந்துள்ளது. திருநாவலூர் கல்வெட்டுகளில் இராசாதித்தியபுரம் என்று குறிக்கப்படுகின்றது. மேலும் இங்குள்ள சிவன் கோயில் இராஜாதித்தீஸ்வரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயில் கற்றளியாக்கப்பட்டது பராந்தக சோழன் காலத்தில் தான். மூன்றாம் கிருஷ்ணனிடம் இப்பகுதியை இழந்த சோழப்பேரரசு மீண்டும் இராஜராஜன் காலத்தில் தான் இப்பகுதியை மீட்டது. மேலும் இக்கோயிலுக்கு பல கொடைகளும், தனியே நடராசர் திருமுன்னும் இராஜராஜன் காலத்தில் அமைக்கப்பட்டது.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் தென்முகக் கடவுள் இங்கு நின்ற நிலையில் இடப வாகனத்துடன் காட்சியளிக்கிறார். பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியாருடன் சுந்தரருக்கு தனி திருமுன் அமைந்துள்ளது. நவக்கிரக சிற்பங்களில் சூரியன் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். சுக்ரன் நிறுவி வழிபட்டதாக தலபுராணம் கூறும் இலிங்கம் உள்ளது. அம்மன் மனோன்மணி இங்கு விரிசடை கோலத்தில் தியான கோலத்தில் உள்ளார்.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. தேவார மூவருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் அவதரித்த திருத்தலம். இத்தலம் சுந்தரரால் பாடல் பெற்ற தலம். நடுநாட்டு பாடல்பெற்ற சிவத்தலங்களள் 22-இல் இத்தலம் 8-வது திருத்தலமாகும்.
சுருக்கம்
சுந்தரர் அவதாரத் திருத்தலம். சுந்தரர், இசைஞானியார், சடையநாயனார், நரசிங்க முனையரையர் ஆகியோர் வழிபட்ட தலம். நரசிங்க முனையரையர் ஒரு சிற்றரசர். சுந்தரரின் வளர்ப்புத் தந்தை. சுக்கிர தோஷம் நீங்க, ஆன்மீக பற்று ஏற்பட வழிபட வேண்டிய தலம். இங்கு தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார். இவர் பூராட நட்சத்திரத்திற்கு உகந்தவர்.மக்கள் வழக்கில் மட்டும் கொச்சையாகத் 'திருநாமநல்லூர்' என்று வழங்குகின்றனர். சுந்தரரின் தந்தையாரான சடைய நாயனார் அவதரித்து சிவத் தொண்டாற்றிய பெரும்பதி. இஃது சுந்தரரின் தாயாரான இசைஞானியார் வாழ்ந்து, தொண்டாற்றி, முத்தி பெற்றத் தலமுமாகும்.அருணகிரிநாதரின் திருப்புகழும் இத்தலத்திற்கு உள்ளது. சுக்கிரன் வழிபட்ட சிவத்தலம். இங்கு தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார். இவர் பூராட நட்சத்திரத்திற்கு உகந்தவர்.கோயிலை அடுத்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவதாரம் செய்த இடத்தில் திருமடம் ஒன்றை எழுப்பி உள்ளனர். சுக்கிர தோஷம் நீங்க ஆன்மீக பற்று ஏற்பட வழிபட வேண்டிய தலமாக ஆன்மீக அன்பர்களால் கூறப்படுகின்றது.
திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. சுந்தரர் அவதாரத் திருத்தலம். சுந்தரர், இசைஞானியார், சடையநாயனார், நரசிங்க முனையரையர் ஆகியோர் வழிபட்ட தலம். நரசிங்க முனையரையர் ஒரு சிற்றரசர். சுந்தரரின் வளர்ப்புத் தந்தை. சுக்கிர தோஷம் நீங்க, ஆன்மீக பற்று ஏற்பட வழிபட வேண்டிய தலம். இங்கு தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார். இவர் பூராட நட்சத்திரத்திற்கு உகந்தவர்.மக்கள் வழக்கில் மட்டும் கொச்சையாகத் 'திருநாமநல்லூர்' என்று வழங்குகின்றனர். சுந்தரரின் தந்தையாரான சடைய நாயனார் அவதரித்து சிவத் தொண்டாற்றிய பெரும்பதி. இஃது சுந்தரரின் தாயாரான இசைஞானியார் வாழ்ந்து, தொண்டாற்றி, முத்தி பெற்றத் தலமுமாகும்.அருணகிரிநாதரின் திருப்புகழும் இத்தலத்திற்கு உள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோயில், திருக்கோவிலூர் திரிவிக்கிரமர் கோயில்
செல்லும் வழி சென்னை - திருச்சி டிரங்க் ரோடில் விழுப்புரம் தாண்டி உளுந்தூர்ப்பேட்டைக்கு முன்பாக, மடப்பட்டு தாண்டி, பிரதான சாலையில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரிந்து எதிரே இடப்பக்கமாக செல்லும் பண்ருட்டி சாலையில் 2-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.30-12.00 முதல் மாலை 4.00-8.30 வரை
திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் பண்ருட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் பண்ருட்டி, பரிக்கல்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி, சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி விழுப்புரம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 41
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்