வழிபாட்டுத் தலம்
பெருங்காஞ்சி அகத்தீசுவரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | பெருங்காஞ்சி அகத்தீசுவரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | அகஸ்தீஸ்வரம் |
| ஊர் | பெருங்காஞ்சி |
| வட்டம் | இராணிப்பேட்டை |
| மாவட்டம் | வேலூர் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | அகத்தீசுவரர் |
| தாயார் / அம்மன் பெயர் | ஸ்ரீ தெய்வநாயகி |
| தலமரம் | வில்வமரம் |
| திருக்குளம் / ஆறு | அகஸ்திய தீர்த்தம் |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | மகாசிவராத்திரி, ஆடிப்பூரம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி ஆரூத்ரா தரிசனம், மாசி தெப்போத்சவம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு / பல்லவர், முற்காலச் சோழர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறை வாயிலுக்கு இடதுபுறம் வரிசையாக அமர்நிலையில் மூன்று கணபதியை சிற்பங்கள் காணப்படுகின்றன. அடுத்து நின்றநிலையில் விநாயகர் திருவுரு, வாயிலுக்கு வலப்புறம் முருகனின் ஒரு கோலமான பிரம்ம சாத்தன், அவரையடுத்து வள்ளி தெய்வயானையுடன் கூடிய அழகிய ஆறுமுகப் பெருமான் ஆகியோர் திருக்கோலங்கொண்டுள்ளனர். கருவறைக்கு வெளியே காவல்புரியும் துவார பாலகர்கள் சிற்பங்களையடுத்து, கருவறையில் வட்ட வடிவ ஆவுடையாரோடு இலிங்கம் அமைந்துள்ளது. சிவலிங்கத்தின் பின்னால் கருவறைச் சுவரில் சோமாஸ்கந்தர் கோலம் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது. இவ்வாறு கருவறையில் அமைப்பது பல்லவர் கலைப்பாணியாகும். வலம்புரி விநாயகர், வீரபத்திரர், பைரவர், பலகையில் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ள கணபதி, தவ்வை ஆகிய சோழர்கால கலைப்படைப்புகள் எழில் வாய்ந்தவையாக உள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவார வைப்புத்தலம். |
|
சுருக்கம்
இக்கோயில் தேவார வைப்புத் தலமாக பாடல் பெற்றுள்ளது. சோழர்கால கலைப்பாணியைப் பெற்று விளங்குகிறது. முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது.
|
|
பெருங்காஞ்சி அகத்தீசுவரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | பெருங்காஞ்சியில் உள்ள இக்கோயில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயிலுக்கு வெளியே ‘அகஸ்த்திய தீர்த்தம்’ அமைந் துள்ளது. கோயிலின் பிரதான வாயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அவ்வாயிலைத் தாண்டி 16 கால் மண்டபம் அமைந்துள்ளது. அம்மண்டபத்திலிருந்து முகமண்டபம் நீள்கிறது. அகத்தீஸ்வரர் கருவறை கிழக்கு நோக்கியுள்ளது. கோயிலின் வெளிச் சுற்றில் முதலில் கல்யாண மண்டபமும், அதையடுத்து நந்தி மண்டபம், பலிபீடம், கொடிமரம் ஆகியவை கருவறைக்கு கிழக்கே உள்ள திருச்சுற்றில் அமைந்துள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | அம்மூர் ஸ்ரீ ஜராவதேஸ்வரர் கோயில், சோளங்கிபுரம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி, யோக ஆஞ்சநேயர் கோயில், ஓழுகூர் ஸ்ரீ த்ரிகாலேஸ்வரர் கோயில், கோவிந்தசேரி குப்பம் ஸ்ரீ ஞானமலைமுருகன், ஆற்காடு ஸ்ரீ ஷடாரண்யம், குடிமல்லூர் ஸ்ரீ பூமேஸ்வரர்கோயில் |
| செல்லும் வழி | பெருங்காஞ்சி வேலூர் மாவட்டத்திலுள்ள வாலாஜப் பேட்டையிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது. வாலாஜாப்பேட்டையிலிருந்து சோளங்கி புரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை - மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை |
பெருங்காஞ்சி அகத்தீசுவரர் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | பெருங்காஞ்சி |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | வேலூர் |
| அருகிலுள்ள விமான நிலையம் | சென்னை - மீனம்பாக்கம் |
| தங்கும் வசதி | இராணிப்பேட்டை வட்டார விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | திரு.தாமஸ் அலெக்சாண்டர் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 21 Mar 2019 |
| பார்வைகள் | 174 |
| பிடித்தவை | 0 |