Back
வழிபாட்டுத் தலம்
திருநெல்வாயில் உச்சிநாதர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருநெல்வாயில் உச்சிநாதர் கோயில்
வேறு பெயர்கள் திருநெல்வாயில் அரத்துறை
ஊர் சிவபுரி
வட்டம் சிதம்பரம்
மாவட்டம் கடலூர்
உட்பிரிவு 1
தாயார் / அம்மன் பெயர் கனகாம்பிகை
தலமரம் நெல்லி
திருக்குளம் / ஆறு கிருபாசமுத்திரம்
வழிபாடு ஐந்து கால பூசை
திருவிழாக்கள் வைகாசி விசாகம், நவராத்திரி, கார்த்திகை சோமவாரம்
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் சதுர வடிவக் கருவறையில் உச்சிநாதர் இலிங்க வடிவில் உள்ளார். தனியாக தெற்கு நோக்கிய கருவறையில் நின்ற கோலத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். கருவறைத்திருச்சுற்றில் விநாயகர், முருகன், தென்முகக்கடவுள் முதலிய திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலம். திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
சுருக்கம்
இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் உச்சிநாதர் என்றும் மத்யனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்மன் கனகாம்பிகை என்று அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தலமரமாக நெல்லி மரம் இருக்கிறது. கோயிலின் தீர்த்தம் கிருபா தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊர் புராண காலத்தில் திருநெல்வாயில் என்றழைக்கப்பட்டது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 3-வது தேவாரத்தலம் ஆகும். அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகும். திருஞானசம்பந்தரும், அவருடன் அறுபத்து மூன்று சைவ அடியார்களும் இத்தலத்திற்கு வரும்பொழுது, உச்சிகாலமானது. அந்நேரம் மிகுந்த பசியோடு இருந்தவர்களுக்கு, இறைவன் கோவில் பணியாளர் வடிவில் வந்து உணவளித்தமையால் உச்சிநாதர் என்ற பெயர்பெற்றார். இக்கோயிலின் அம்பிகை பெயர் கனகாம்பிகை என்பதால் இக்கோயிலை இவ்வூர் மக்கள் கனகாம்பிகை கோயில் எனவும் வழங்குகின்றனர்.
திருநெல்வாயில் உச்சிநாதர் கோயில்
கோயிலின் அமைப்பு உச்சிநாதர் கோயிலில் கிழக்கு பார்த்த ஐந்து நிலை இராஜகோபுரம் நுழைவாயிலாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு திருச்சுற்றினைப் பெற்று விளங்குகிறது. இறைவன் கருவறை விமானம் மற்றும் தேவியின் கருவறை விமானம் தனித்தனியாக அமைந்துள்ளன. இறைவன் கருவறை கிழக்கு நோக்கியும், அம்மனின் கருவறை தெற்கு நோக்கியும் காணப்படுகின்றன. சதுரவடிவமான கருவறைகளாக அவை வடிவம் பெற்றுள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருவேட்களம், திருக்கழிப்பாலை
செல்லும் வழி சிவபுரி சிவன் கோயில் என்றழைக்கப்படும் திருநெல்வாயில் எனும் திருத்தலமானது சிதம்பரத்திற்கு அருகில் 3 கி.மீ தொலைவில் அண்ணாமலைநகர் பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டி அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் பகல் 11 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.15 மணி வரை
திருநெல்வாயில் உச்சிநாதர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் சிவபுரி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம் மீனம்பாக்கம், புதுச்சேரி
தங்கும் வசதி சிதம்பரம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 32
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்