Back
வழிபாட்டுத் தலம்
காளியாபட்டி சிவன் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் காளியாபட்டி சிவன் கோயில்
வேறு பெயர்கள் பராந்தக சோழன் கோயில்
ஊர் காளியாபட்டி
வட்டம் குன்னாண்டார் கோயில்
மாவட்டம் புதுக்கோட்டை
உட்பிரிவு 1
மூலவர் பெயர் சிவபெருமான்
காலம் / ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முதலாம் பராந்தச் சோழன்
கல்வெட்டு / செப்பேடு கல்வெட்டுகள் உள்ளன.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் நந்தி, சிவன், தட்சிணாமூர்த்தி போன்ற தனிச்சிற்பங்கள் உள்ளன.
தலத்தின் சிறப்பு 1100 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது.
சுருக்கம்
இக்கோயில் கி.பி.9-ஆம் நூற்றாண்டில் முதலாம் பராந்தக சோழனால் எடுப்பிக்கப்பட்டதாகும். ஒரு தளக் கற்றளியாக விளங்குகிறது. சுவர்களில் கோட்டங்களும், அரைத்தூண்களும் அழகு செய்கின்றன. நாகரபாணி விமானத்தைக் கொண்டுள்ளது. கருவறை சதுரவடிவமாக அமைந்துள்ளது. மகாமண்டபம் சிதிலமடைந்துள்ளது. மகாமண்டபத்தின் தாங்குதளம் மட்டும் காணப்படுகின்றது. இதில் கல்வெட்டுகள் அமைந்துள்ளன.
காளியாபட்டி சிவன் கோயில்
கோயிலின் அமைப்பு ஒரு தளக் கற்றளியாக விளங்குகிறது. சுவர்களில் கோட்டங்களும், அரைத்தூண்களும் அழகு செய்கின்றன. நாகரபாணி விமானத்தைக் கொண்டுள்ளது. கருவறை சதுரவடிவமாக அமைந்துள்ளது. மகாமண்டபம் சிதிலமடைந்துள்ளது. மகாமண்டபத்தின் தாங்குதளம் மட்டும் காணப்படுகின்றது. இதில் கல்வெட்டுகள் அமைந்துள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் நார்த்தாமலை, குன்னாண்டார் கோயில், விசலூர் கோயில்
செல்லும் வழி மதுரையிலிருந்து 140 கி.மீ. தொலைவிலுள்ள புதுக்கோட்டையிலிருந்து கீரனூர் வழியாக குன்னாண்டார் கோயில் செல்லலாம். அங்கிருந்து விசலூர் வழியாக காளியாபட்டி சிவன் கோயில் செல்லலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
காளியாபட்டி சிவன் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் விசலூர், குன்னாண்டார் கோயில்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி புதுக்கோட்டை விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 42
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்