வழிபாட்டுத் தலம்
பெருமுக்கல் முக்தியாலீஸ்வரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | பெருமுக்கல் முக்தியாலீஸ்வரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | திருவான்மிகை ஈஸ்வரமுடையார், பெருமுக்கல் உடையார், முக்யாசலேசுவரர் |
| ஊர் | பெருமுக்கல் |
| வட்டம் | மரக்காணம் |
| மாவட்டம் | விழுப்புரம் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | முக்தியாலீஸ்வரர் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு / விக்கிரம சோழன் |
| கல்வெட்டு / செப்பேடு | கோயிற்சுவர்களிலும், பாறைகளிலும் 60-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இவ்வூர்க் கல்வெட்டுகள் பல சுவையான செய்திகளைத் தருகின்றன. கோயில் நிலங்கள் ஏலம் கூறி விற்கப்பட்டன. 12 அடி கோலால் நிலங்கள் அளக்கப்பட்டன.கோயிலுக்கென தேவரடியார்கள் நியமிக்கப்பட்டனர். அனுமன் கோயிலில் உள்ள பலகைக் கல்லில் உத்தமசோழன் காலத்தில் அம்பலவன் கண்டாரதித்தன் என்பவன் ஒரு கோயில் கட்டிய விபரம் உள்ளது. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | தென்முகக் கடவுள், தூண் புடைப்புச் சிற்பங்கள் |
| தலத்தின் சிறப்பு | 800ஆண்டுகள் பழமையானது. பிற்கால சோழர் கால கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது. |
|
சுருக்கம்
இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் உத்தமச் சோழன் காலம் முதல் தொடர்ச்சியான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. விக்கிரமச்சோழன் காலத்தில் கற்றளியாக்கப்பட்டுள்ளது. இவ்வூரைச் சுற்றி மூன்று பெரிய குன்றுகள் இருப்பதால் பெருமுக்கல் (மூன்று பெரிய கற்கள்) என்ற பெயர் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இக்கோயில் அமைந்துள்ள மலையின் மேற்புறச் சரிவில் இயற்கையான குகை போன்றதோர் பகுதி உள்ளது. இதனை ஊரார் சீதாப்பிராட்டி குகை என்று அழைப்பர். இங்கு பாறையில் கீறல் பொறிப்புடன் வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ளது. கீறல் வளைவுகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகும். இங்குள்ள கல்வெட்டு பெருந்தச்சன் என்பவனால் எழுதப்பட்டுள்ளது. இவை கி.பி.6-7 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ளது எனலாம்.
|
|
பெருமுக்கல் முக்தியாலீஸ்வரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | பெருமுக்கல் ஊரின் மலை மேல் உள்ள இறைவனுக்கு எடுப்பிக்கப்பட்ட கோயில் திருவான்மிகை ஈஸ்வரமுடையார் கோயில் எனவும், பெருமுக்கல் உடையார் கோயில் எனவும், முக்யாசலேசுவரர் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இராஜகோபுரமும், திருச்சுற்றும், மண்டபங்களும், கருவறையும் கொண்ட இக்கோயில் தொன்மை வாய்ந்ததாகும். முதல் குலோத்துங்கன் காலம் வரை செங்கல் கோயிலாக இருந்த இந்த சிவன் கோயில் விக்கிரமச் சோழன் காலத்தில் கற்றளியாக்கப்பட்டுள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | பெருமுக்கல் சீதாகுகை, உலகாபுரம் சிவன் கோயில், உலகாபுரம் விஷ்ணு கோயில், கண்டராதித்தப் பேரேரி, காலகண்ட பேரேரி, ஷகாளி கோயில், அய்யனார் கோயில் |
| செல்லும் வழி | சென்னையிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் சாலையில் 11 கி.மீ. தொலைவில் பெருமுக்கல் உள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 33 |
| பிடித்தவை | 0 |