வழிபாட்டுத் தலம்
கொடும்பாளூர் முசுகுந்தேசுவரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | கொடும்பாளூர் முசுகுந்தேசுவரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | முசுகுந்தேசுவரர் கோயில் |
| ஊர் | கொடும்பாளூர் |
| வட்டம் | துவரங்குறிச்சி |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| உட்பிரிவு | 1 |
| காலம் / ஆட்சியாளர் | கிபி.10-ஆம் நூற்றாண்டு |
| சுவரோவியங்கள் | இல்லை |
| தலத்தின் சிறப்பு | 1100 ஆண்டுகள் பழமையானது. சோழர் காலக் கற்றளி. |
|
சுருக்கம்
சங்க காலத்திலிருந்து புகழ்பெற்று விளங்கும் கொடும்பாளூரில் மூவர் கோவிலுக்கு சற்று தொலைவே மேற்கே கண்மாய்க் கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் இடங்கழி நாயனார் கோயிலிலிருந்து வடக்கில் செல்லும் வழியில் அமைந்துள்ளது.முசுகுந்தேஸ்வரர் கோயில். இக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனின் பெயர் முதுகுன்றம் உடையார் என்பதாகும். இக்கோயிலை மகிமலாய இருக்குவேள் என்கிற பராந்தக குஞ்சரமல்லன் எனும் சிற்றரசன் கி. பி 921 ஆம் ஆண்டு கட்டினான். எனவே இந்த கோயிலும் தஞ்சை பெரிய கோவிலைப் போல 1000 ஆண்டு பழமையான வரலாறு கொண்ட கோவிலாகும். இக்கோவில் முழுக்க சோழர் கால கட்டிக்கலையே பின்பற்றப்பட்டுள்ளது.
|
|
கொடும்பாளூர் முசுகுந்தேசுவரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்து சமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | |
| செல்லும் வழி | கொடும்பாளூர் புதுக்கோட்டையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் புதுக்கோட்டை-மணப்பாறை செல்லும் வழியில் அமைந்துள்ளது. மணப்பாறையிலிருந்து பேருந்திலும் செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8:30 மணி முதல் மாலை 6:15 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 115 |
| பிடித்தவை | 0 |