Back
வழிபாட்டுத் தலம்

அம்பை அருள்மிகு கிருஷ்ணசுவாமி கோயில்

அம்பை அருள்மிகு கிருஷ்ணசுவாமி கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அம்பை அருள்மிகு கிருஷ்ணசுவாமி கோயில்
வேறு பெயர்கள் வேணுகோபால சுவாமி
ஊர் அம்பாசமுத்திரம் நகர்
வட்டம் அம்பாசமுத்திரம்
மாவட்டம் திருநெல்வேலி
தொலைபேசி 04634-250555
உட்பிரிவு 2
தாயார் / அம்மன் பெயர் ருக்மிணி, சத்தியபாமா
தலமரம் புன்னை
திருக்குளம் / ஆறு ஹரிஹர தீர்த்தம்
ஆகமம் பாஞ்சராத்திர ஆகமம்
வழிபாடு விஸ்வரூபம், உச்சிக்காலம், சாயரட்சை, திருவிசாகம்
திருவிழாக்கள் வைகாசி விசாகம், கிருஷ்ண ஜெயந்தி, ஆடி சுவாதி, வைகுண்ட ஏகாதசி
காலம் / ஆட்சியாளர் கி.பி.16-ஆம் நூற்றாண்டு / மதுரை நாயக்கர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறையில் மூலவர் வேணுகோபால சுவாமி நேபாள கண்டகி தீரத்தில் உள்ள சாளக்கிராமத்தினால் ஆனவர். மூலவர் ருக்மிணி, சத்தியபாமாவோடு காட்சியளிக்கிறார். சக்கரத்தாழ்வார் இங்கு உள்ளார். இக்கோயிலின் வடபுறம் உள்ள ஹரிஹர தீர்த்தம் என்ற குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்தில் சிவன், கிருஷ்ணன் ஆகியோர் திருவுருவங்கள் காணப்படுகின்றன. கிருஷ்ணன் புல்லாங்குழலூதி நின்றபடி காட்சியளிக்கிறார். மேலும் இக்கோயில் திருக்கதவுகள் இரண்டிலும் பெருமாளின் தசாவதாரக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தலத்தின் சிறப்பு 500 ஆண்டுகள் பழமையானது. நவக்கிரக தோஷங்களை போக்குகின்ற தலமாக விளங்குகின்றது. மாணவர்கள் கல்வியில் சிறப்புற்று விளங்கிட புதன்கிழமைகளில் பாசிப்பயிறு படைத்து வழிபடுவர். கிருஷ்ண ஜெயந்தி அன்று சுவாமிக்கு சங்கு பால் தரப்படும். அப்போது பக்தர்களுக்கு பிரசாதமாக நெல் வழங்கப்படும் இதனை அரிசியுடன் கலந்து வைத்தால் அன்னத்திற்குப் பஞ்சம் வராது என்பது நம்பிக்கை.
சுருக்கம்

கி.பி.16-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம். இக்கோயிலின் கட்டடக்கலை அமைப்பை நோக்குங்கால் இது பிற்காலத்தியது எனத் தெரிகின்றது. இக்கோயிலில் கல்வெட்டுகள் எதுவும் இடம் பெறவில்லை. எனினும் கோயிலுக்கு சொந்தமான நன்செய் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அவற்றின் வருவாயில் கோயில் நிர்வாகம் நடைபெறுகிறது. எனவே இக்கோயிலுக்கு நிலக்கொடைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஏனோ அவை கல்வெட்டுகளாக இடம் பெறவில்லை. இக்கோயில் மூலவர் எப்போதும் துணைவியரான ருக்மிணி, சத்தியபாமையுடன் இருப்பதால் நித்யகல்யாணப் பெருமாள் என்று வழங்கப்படுகிறார். இங்கு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. இங்கு வேணுகோபாலரே தனது நாச்சியார்களுடன் தீர்த்தவாரி காண்கிறார். இக்கோயில் கருவறை சதுர வடிவமானது. மூலவர் நின்ற நிலையில் உள்ளார். அதனையடுத்து உள்ள மண்டபத்தில் உருளைத்தூண்கள் இருவரிசையில் உள்ளன. நடுவில் உற்சவமூர்த்தி திருவுருவம் அமைந்துள்ளது. அதனையடுத்து முகப்பில் துவாரபாலகர் திருவுருவங்கள் வரையப்பட்டுள்ளன. கருவறை விமானம் ஏக தளமுடையதாக உள்ளது. திராவிடப்பாணியில் அதாவது சிகரம் (தலை) எட்டுப்பட்டை உடையதாக உள்ளது. கூரைப்பகுதிக்கு மேல் சுதையால் உருவாக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தின் தாங்குதளத்தினையடுத்து சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அமைந்துள்ளன. கோட்டங்கள் வெற்றிடமாக உள்ளன. சிற்பங்கள் இடம் பெறவில்லை. கூரைப்பகுதியில் கொடுங்கையில் கூடுமுகங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில திருமால் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சுற்றில் வாகன மண்டபம் அமைந்துள்ளது. அவற்றில் கருடன், அனுமன் உள்ளிட்ட பல வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

அம்பை அருள்மிகு கிருஷ்ணசுவாமி கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் கருவறை சதுர வடிவமானது. மூலவர் நின்ற நிலையில் உள்ளார். அதனையடுத்து உள்ள மண்டபத்தில் உருளைத்தூண்கள் இருவரிசையில் உள்ளன. நடுவில் உற்சவமூர்த்தி திருவுருவம் அமைந்துள்ளது. அதனையடுத்து முகப்பில் துவாரபாலகர் திருவுருவங்கள் வரையப்பட்டுள்ளன. கருவறை விமானம் ஏக தளமுடையதாக உள்ளது. திராவிடப்பாணியில் அதாவது சிகரம் (தலை) எட்டுப்பட்டை உடையதாக உள்ளது. கூரைப்பகுதிக்கு மேல் சுதையால் உருவாக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தின் தாங்குதளத்தினையடுத்து சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அமைந்துள்ளன. கோட்டங்கள் வெற்றிடமாக உள்ளன. சிற்பங்கள் இடம் பெறவில்லை. கூரைப்பகுதியில் கொடுங்கையில் கூடுமுகங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில திருமால் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சுற்றில் வாகன மண்டபம் அமைந்துள்ளது. அவற்றில் கருடன், அனுமன் உள்ளிட்ட பல வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் அம்பை காசிப நாதர் கோயில், மன்னார்கோவில் இராஜகோபாலசுவாமி கோயில்
செல்லும் வழி திருநெல்வேலி-பாபநாசம் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள அம்பாசமுத்திரத்தின் நுழைவாயிலில் இக்கோயில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 -10.00 முதல் மாலை 5.30-8.30 வரை
அம்பை அருள்மிகு கிருஷ்ணசுவாமி கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருநெல்வேலி, தென்காசி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருநெல்வேலி, தென்காசி
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி
ஒளிப்படம் எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர்
வழிபாட்டுத் தலம்

அம்பை அருள்மிகு கிருஷ்ணசுவாமி கோயில்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 1338
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்