வழிபாட்டுத் தலம்
விளக்கொளிப் பெருமாள் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | விளக்கொளிப் பெருமாள் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | விளக்கொளிப் பெருமாள், தீபப் பிரகாசர், திவ்யப் பிரகாசர் |
| ஊர் | தூப்புல் |
| வட்டம் | காஞ்சிபுரம் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| தொலைபேசி | 9894443108 |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | விளக்கொளிப் பெருமாள் |
| தாயார் / அம்மன் பெயர் | மரகதவல்லி நாச்சியார் |
| திருக்குளம் / ஆறு | சரஸ்வதி தீர்த்தம் |
| திருவிழாக்கள் | வைகாசி மாதம் காஞ்சி வரதராஜப்பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளி வேதாந்த தேசிகனுக்கு காட்சி கொடுக்கும் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் விளக்கொளி பெருமாள் வேதாந்தர் திருமுன் செல்வதும், மார்கழி மற்றும் சித்திரைப் பௌர்ணமிகளில் வரதராஜப் பெருமாள் எழுந்தருளி தேசிகனுக்கு மரியாதை செய்வதும் விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு |
| சுவரோவியங்கள் | வேதாந்த தேசிகன் மற்றும் விளக்கொளிப் பெருமாளின் தற்கால ஒவியங்கள் உள்ளன. |
| சிற்பங்கள் | இலட்சுமி, ஹயக்கிரீவர், ஆண்டாள், ஆழ்வார்கள், வேதாந்த தேசிகர், தீபப்பிரகாசர், கருடன் ஆகியோருக்கு தனித்தனி சிறுகோயில்கள் அமைந்துள்ளன. கருவறையில் நின்ற நிலையில் விளக்கொளிப் பெருமாள் உள்ளார். திருவீதியுலா செப்புத் திருமேனியும் உள்ளது. வேதாந்த தேசிகருக்கு தனி சிறுகோயிலில் அவரது திருவுருவம் அமைந்துள்ளது. |
| தலத்தின் சிறப்பு | 1100 ஆண்டுகள் பழமையானது. மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலம். பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 46-வது திருத்தலமாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலம் இது. திருத்தண்கா, தூப்புல் என்று இத்தலம் பாடலில் குறிப்பிடப்படுகிறது. |
|
சுருக்கம்
இக்கோயிலில் மூலவர் கருவறை விமானம் ஸ்ரீகர விமானம் என்றழைக்கப்படுகிறது. இது கரக்கோயில் வகையைச் சார்ந்தது ஆகும். இலட்சுமி, ஹயக்கிரீவர், ஆண்டாள், ஆழ்வார்கள், வேதாந்த தேசிகர், தீபப்பிரகாசர், கருடன் ஆகியோருக்கு தனித்தனி சிறுகோயில்கள் அமைந்துள்ளன. வைணவ ஆச்சாரியாரான வேதாந்த தேசிகன் என்பவரின் தாய் தனக்கு குழந்தை வேண்டி இத்தலத்துப் பெருமாளிடம் வேண்டினார். பெருமாள் தன் கையில் இருந்த மணியே குழந்தையாக பிறக்கும்படி அருள்பாலித்தார் என தலவரலாறு கூறுகிறது. 1268 ஆம் ஆண்டு தோன்றிய வேதாந்த தேசிகர் 1369 வரை ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார். பல நூல்களை வடமொழியில் இருந்து மொழிபெயர்த்தார். மேலும் வரதராஜப் பெருமாள் மீது அடைக்கலப்பத்து என்ற பாமாலையைப் பாடியுள்ளார். இவரது புதல்வன் நயின வரதச்சாரியார் விளக்கொளிப் பெருமாள் கோயிலுக்கு திருப்பணி செய்தார். வேதாந்த தேசிகர் வழிபட்ட இலட்சுமி ஹயக்கிரீவர் திருமேனி இன்றும் கோயிலில் உள்ளது. சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் இவருக்கு அவதார விழா கொண்டாடப்படுகிறது. இத்தலம் பண்டு தர்ப்பைப் புல் மிகுந்த பகுதியாக இருந்ததால் தூப்புல் என வழங்கப்படுகிறது. திருத்தண்கா எனவும் மங்களாசாசனத்தில் குறிப்பிடப்படுகிறது. திருமங்கையாழ்வார் இரண்டு பாசுரங்களில் இத்தலத்தைக் குறிப்பிட்டுள்ளார். குழந்தை வரம் வேண்டியும், கல்விக்கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தலத்து இறைவனை வேண்டிக் கொள்கின்றனர்.
|
|
விளக்கொளிப் பெருமாள் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் விமானம் ஸ்ரீகர விமானம் எனப்படுகிறது. வேதாந்த தேசிகரின் புதல்வன் நயின வரதாச்சாரியாரால் இக்கோயில் முழுவதும் கி.பி.14-ஆம் நூற்றாண்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் வேதாந்த தேசிகர், இலட்சுமி ஹயக்கிரீவர், ஆண்டாள், கருடன் ஆகியோருக்கு தனி சிறுகோயில்கள் அமைந்துள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | காமாட்சியம்மன் திருக்கோயில், ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், கைலாசநாதர் கோயில், ஜுரஹரேஸ்வரர் கோயில் |
| செல்லும் வழி | சென்னையிலிருந் 75 கி.மீ. தொலைவில் உள்ள காஞ்சிபுரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.00-9.00 முதல் மாலை 5.00-7.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 35 |
| பிடித்தவை | 0 |