வழிபாட்டுத் தலம்
மகர நெடுங்குழைக்காதப் பெருமாள் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | மகர நெடுங்குழைக்காதப் பெருமாள் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | தென்திருப்பேரை |
| ஊர் | தென்திருப்பேரை |
| வட்டம் | ஆழ்வார் திருநகரி |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | மகர நெடுங்குழைக்காதன், நிகரில் முகில் வண்ணன் |
| தாயார் / அம்மன் பெயர் | குழைக்காவல்லி, திருப்பேரை நாச்சியார் |
| திருக்குளம் / ஆறு | சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம், மத்ஸய (மகர) தீர்த்தம் |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | வைகுண்ட ஏகாதசி, இராமநவமி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பாண்டியர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | மகர நெடுங்குழைக்காதன். நிகரில் முகில் வண்ணன். கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம். |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. நம்மாழ்வார் பாசுரம் இயற்றியுள்ளார். |
|
சுருக்கம்
ஆழ்வார்களில் நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களால்பாடப்பட்டுள்ள. மிகச்சிறிய கிராமமாக இந்த ஊர் விளங்குகிறது. இக்கோவில் மிகவும் பெரியது. எந்நேரமும் போக்குவரவு வசதியுள்ளது. நெடுஞ்சாலையருகே மிகவும் அழகுற அமைந்துள்ளது இக்கிராமம். மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளார்.
|
|
மகர நெடுங்குழைக்காதப் பெருமாள் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் கருவறை விமானம் பத்ர விமானம் ஆகும். |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | |
| செல்லும் வழி | திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கு திசையில் உள்ளது. திருக்கோளூரில் இருந்தும் இவ்வூருக்கு பேருந்து வசதியுள்ளது. திருக்கோளூரிலிருந்து நடந்தும் வரலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
மகர நெடுங்குழைக்காதப் பெருமாள் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | தென்திருப்பேரை |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | திருநெல்வேலி |
| அருகிலுள்ள விமான நிலையம் | மதுரை |
| தங்கும் வசதி | திருநெல்வேலி நகர விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Nov 2018 |
| பார்வைகள் | 41 |
| பிடித்தவை | 0 |