வழிபாட்டுத் தலம்
திருநாதர்குன்று சமணர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருநாதர்குன்று சமணர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | சிம்மபுரம், சமணர் குகைத்தளம் |
| ஊர் | திருநாதர்குன்ற |
| வட்டம் | செஞ்சி |
| மாவட்டம் | விழுப்புரம் |
| உட்பிரிவு | 6 |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு |
| கல்வெட்டு / செப்பேடு | திருநாதர்குன்றில் மூன்று கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. முதிர்ந்த பிராமிய எழுத்துமுறையிலிருந்து, வட்டெழுத்தாகத் தமிழ் எழுத்துகள் வளர்ந்து, மாறுதல் அடைந்த காலக்கட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டில்தான் முதன் முதலில் தொன்மையான 'ஐ' எனும் தமிழ் எழுத்து கண்டறியப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ள தகவல், 'சந்திரநந்தி ஆசிரியர் எனும் சமணத்துறவி ஐம்பத்தேழு நாள்கள் உண்ணாமல் நோன்பிருந்து வீடுபேறு பெற்றார் (உயிர்நீத்தார்)' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி.5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இரண்டாம் மகேந்திர பல்லவன் காலத்தைச் சேர்ந்த மற்றொரு கல்வெட்டில், கோயிலில் விளக்கேற்ற ஆடு, மாடுகள் தானமாக வழங்கப்பட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மூன்றாவதாகக் காணப்படும் 10 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில், 'இளையபட்டாரகர் எனும் சமணத்துறவி 30 நாள்கள் உண்ணாமால் நோன்பிருந்து உயிர் துறந்தார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | திருநாதர்குன்றின் உச்சிப்பகுதியில்பெரிய கற்பாறை ஒன்று காணப்படுகிறது. அதன் உச்சி பகுதியில் இரண்டு வரிசைகளில் சமமான இடைவெளியில் செதுக்கப்பட்டுள்ள 24 சிற்பங்கள் நமது கண்களை கவரும் வகையில் உள்ளன. அந்தச் சிற்பங்கள், சமணத்தைப் பரப்பிய தீர்த்தங்கரர்களின் திருமேனிகள் எனக் கூறப்படுகின்றன. முதல் வரிசையில் உள்ள 12 தீர்த்தங்கரர்கள் சிற்பங்களும், இரண்டாம் வரிசையில் உள்ள 12 தீர்த்தங்கரர்கள் சிற்பங்களும் அமர்ந்த நிலையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. சாமரங்கள் ஒவ்வொரு தீர்த்தங்கரரின் இடையிலும் பொறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தீர்த்தங்கரர்களின் தலையின் மேற்பகுதியிலும் முக்குடை அமைப்பு காணப்படுகிறது. |
| தலத்தின் சிறப்பு | 1500 ஆண்டுகள் பழமையானது. தமிழ்-பிராமிக் கல்வெட்டு காணப்படுகின்றது. |
|
சுருக்கம்
இங்குள்ள ஒரு கல்வெட்டு, சந்திரநந்தி ஆசிரியர் எனும் சமணத்துறவி 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீடுபேறு பெற்றார் என்கிறது. மற்றொரு கல்வெட்டு, இளையபட்டாரகர் எனும் சமணத்துறவி முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார் என்கிறது. சமீபத்தில் காணப்பட்ட கல்வெட்டு கோயிலில் விளக்கேற்ற நானூறு ஆடுகள் தானம் தரப்பட்டதாகத் தெரிவிக்கிறது.
|
|
திருநாதர்குன்று சமணர் கோயில்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | மத்தியத் தொல்லியல் துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | செஞ்சிக் கோட்டை, ஊரணித்தாங்கல் சமணப்படுக்கைகள், இராஜகிரி கோட்டை |
| செல்லும் வழி | விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியிலிருந்து சிங்கவரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது திருநாதர் குன்று. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 50 |
| பிடித்தவை | 0 |