Back
வழிபாட்டுத் தலம்
திருஇந்தளூர் சுகந்தவனநாதர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருஇந்தளூர் சுகந்தவனநாதர் கோயில்
வேறு பெயர்கள் பரிமள ரெங்கநாதர் கோயில்
ஊர் திருஇந்தளூர்
வட்டம் மயிலாடுதுறை
மாவட்டம் நாகப்பட்டினம்
உட்பிரிவு 1
மூலவர் பெயர் பரிமள ரெங்கநாதன்
தாயார் / அம்மன் பெயர் பரிமள ரெங்கநாயகி, சந்திர சாப விமோசன வல்லி
தலமரம் புன்னை, பாடலி
திருக்குளம் / ஆறு சந்திர (இந்து) புஷ்கரிணி
வழிபாடு ஆறுகால பூசை
திருவிழாக்கள் மாசிமகப் பெருவிழா
காலம் / ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் நான்கு புஜங்களுடன் கூடின இப்பெருமாளின் திருவடியருகில் கங்கைத் தாயாரும், சிரசருகில் காவிரித் தாயாரும் அமைந்துள்ளனர்.
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்
சுருக்கம்
காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. பஞ்சரங்க தலங்களில் பஞ்சரங்கம் மற்றும் அந்தரங்கம் என்று சொல்லப்படுகிறது. வேதசக்ர விமானத்தின் கீழ் பரிமளரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார். பெருமாள் சந்நிதியின் இருபுறங்களிலும் ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். பரிமளரங்கநாதர் திருவடிகளில் யமதர்மராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி ஆகும். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப்பெற்றமையால் இவ்வூர் திருஇந்தளூர் எனப்பெயர் பெற்றது.
திருஇந்தளூர் சுகந்தவனநாதர் கோயில்
கோயிலின் அமைப்பு
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள்
செல்லும் வழி இத்தலம் மயிலாடுதுறை (மாயவரம்) நகரத்திலேயே அமைந்துள்ளது. இந்தளூர் என்றால் பலருக்குத் தெரியாது. மாயவரம் பரிமள ரெங்கன் கோயில் என்றால் எல்லோருக்கும் தெரியும்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 வரை
திருஇந்தளூர் சுகந்தவனநாதர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருஇந்தளூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருஇந்தளூர், நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி மயிலாடுதுறை விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 23 Nov 2018
பார்வைகள் 33
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்