வழிபாட்டுத் தலம்
சோணை கருப்பசாமி கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் சோணை கருப்பசாமி கோயில்
வேறு பெயர்கள் சோணை கருப்பர்
ஊர் கோவில்பாப்பங்குடி
வட்டம் மதுரை மேற்கு
மாவட்டம் மதுரை
உட்பிரிவு 5
திருக்குளம் / ஆறு கோவில்பாப்பங்குடி கண்மாய்
வழிபாடு ஒருகால பூசை
திருவிழாக்கள் மாசி மகாசிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் சோணை கருப்புசாமி கோயில் மூலவர் சோணை கருப்புசாமி கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுதைச்சிற்பமாக வடிக்கப்பட்டு, வண்ணம் பல தீட்டப்பட்டு விழாக்காலங்களில் உலாப்படிமமாக எடுத்துச் செல்லப்படுகிறார். சோணை கருப்பசாமி கோபுரத்தின் முன்னால் சோணைச்சாமி குதிரையில் அமர்ந்துள்ள மிகப்பெரிய சுதைச்சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.
தலத்தின் சிறப்பு ஊரின் காவல் தெய்வம். பல்குடிகளுக்கு குலதெய்வம்.
சுருக்கம்
சோணைக்கருப்பசாமி காவல் தெய்வங்களான கருப்பசாமிகளில் ஒருவர் ஆவார். கருப்பசாமிகள் பலர் ஆவர். சோனை எனில் கார்முகில் எனப்பொருள் கொள்ளலாம். கார்முகில் போன்ற கருமை நிறத்தை உடையவர் என்ற பொருளில் சோனை சாமி வழங்கப்படுகிறார். தென்தமிழகத்தில் நாட்டார் குலதெய்வங்களில் சோணைக்கருப்பும் ஒருவர் ஆவார். சோணைக்கருப்பசாமி பலவிடங்களில் பீடங்களாய் வழிபடப்படுகிறார். சிலவிடங்களில் அவர் நின்றநிலையில் முறுக்கு மீசையுடன் அரிவாள் தாங்கி பெருவீரனாய் நிற்பதாக சிற்பங்கள் காணப்படுகின்றன. கோவில்பாப்பாங்குடியில் அமைந்துள்ள சோனை கருப்பசாமி கோயில் இவ்வூரில் பல குடிகளுக்கு குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது.
சோணை கருப்பசாமி கோயில்
கோயிலின் அமைப்பு கோயில் மூன்று நிலை கொண்ட கோபுரத்துடன் கூடிய நிலை வாயிலைப் பெற்றுள்ளது. கோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் கருவறை விமானம் காணப்படுகின்றது. கருவறையின் மையப்பகுதியில் இறைவன் வீற்றிருக்கிறார்.
பாதுகாக்கும் நிறுவனம் தனியார்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் அய்யனார் கோயில், ஸ்ரீஅம்மச்சியாத்தா கோயில், ஸ்ரீமுத்துநாயகி அம்மன் கோயில்
செல்லும் வழி மதுரையிலிருந்து பாலமேடு செல்லும் முக்கிய சாலையில் சுமார் 9 கி.மீ. தொலைவில் கோவில்பாப்பாங்குடி அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
சோணை கருப்பசாமி கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
தங்கும் வசதி
ஒளிப்படம் எடுத்தவர் கே.பி.கே.திரு, கே.பி.கே.விஷ்ணு, சிலம்பு செல்வன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 64
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்