Back
வழிபாட்டுத் தலம்
புள்ளமங்கை சிவன் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் புள்ளமங்கை சிவன் கோயில்
வேறு பெயர்கள் ஆலந்துறை மகாதேவர் கோயில்
ஊர் பசுபதி நாதர் கோயில்
வட்டம் பாபநாசம்
மாவட்டம் தஞ்சாவூர்
உட்பிரிவு 1
மூலவர் பெயர் ஆலந்துறை மகாதேவர்
தாயார் / அம்மன் பெயர் சௌந்தரநாயகி
காலம் / ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் பராந்தகச் சோழன்
கல்வெட்டு / செப்பேடு புள்ளமங்கை கோயிலில் 21 கல்வெட்டுகள் உள்ளன. 18 கல்வெட்டுகள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. புள்ளமங்கலம் கோயிலில் முதலாம் பராந்தகனின் 3-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டே காலத்தால் முந்தியது. இதன் மூலம் அந்த அரசனே இக்கோயிலைக் கட்டியுள்ளான் என்பதும் உறுதிப்படுகிறது. புள்ளமங்கை கோயிலுக்கு அளிக்கப்பட்ட விளக்குக் கொடைகள் அனைத்தும் நிலக்கொடைகளாகவே வழங்கப்பட்டுள்ளன. சோழர்கள் காலத்தில் கோயில்கள் நிலவுடைமை சமுதாயத்தை சார்ந்திருந்தது என்பதை இது காட்டுகிறது. ஆதித்த கரிகாலன் காலத்து கல்வெட்டொன்று இக்கோயிலில் உள்ள காளாபிடாரிக்கு கொடையளித்த விவரத்தைக் கூறுகிறது. இதற்குக் கொடையளித்தவர்கள் யாவரும் பிராமணரல்லாதவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளமங்கை ஒரு மகாசபையாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த மகாசபையை சேர்ந்தவர்கள் அனைவரும் பிராமணர் அல்லாதவர்களாக இருந்தனர். முதலாம் இராசராசனின் 12-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு சந்திரகிரகணத்தன்று சபை கூடியதைக் குறிப்பிடுகிறது. மகாசபையில் கணக்கு காட்டாமல் விட்ட குற்றம், கொலைக்கு தண்டனையாக விளக்கெரித்தல் ஆகிய கல்வெட்டுகள் குறிப்பிடத்தக்கன. கங்கமன்னன் இரண்டாம் பிருதிவிபதி என்பவன் பராந்தகனுக்கு வல்லம் போரில் துணை நின்றவன். அம்மன்னன் கோயிலுக்கு நிலம் கொடையளித்துள்ளான். கோயிலுக்கு திமிலை என்னும் வாத்தியக் கருவி இசைக்கும் கலைஞர்களுக்கு இவ்வூர் சபையார் ஸ்ரீகண்டமங்கலத்து கிழார் என்னுமிடத்தில் உள்ள நிலத்தினை கொடையாக கொடுத்துள்ளனர்.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் புள்ளமங்கை கோயிலில் தேவக்கோட்டத்தில் முறையே தெற்கில் ஆலமர்செல்வனும், மேற்கே அண்ணாமலையாரும், வடக்கே நான்முகனும் காட்டப்பட்டுள்ளனர். அர்த்தமண்டப கோட்டத்தில் தெற்கில் கணபதியும், வடக்கில் மகிஷமர்த்தினியும் அமைந்துள்ளனர். தாங்குதளத்தில் இராமாயண புடைப்புச் சிற்பங்களும், சிவவடிவங்களும் வரிசையாகக் காட்டப்பட்டுள்ளன. அர்த்தமண்டபத்தில் வாயிற்காவலர்கள் உள்ளனர். மண்பத்தின் நாற்புறமும் செல்லும் பூதவரிகள் காணப்படுகின்றன. மேலும் அம்மண்டபத்தில் உள்ள தூண்களில் மாலைத் தொங்கல் பகுதியில் புடைப்புச் சிற்பங்களாக ஆடல் மகளிர் காட்டப்பட்டுள்ளனர். கருவறை விமானத்தின் கூரைப்பகுதியில் ஆடல் மங்கையர் காட்டப்பட்டுள்ளனர். மேலும் ஆடல் பாடலுடன் பூதகணங்களும் வரிசையாக செல்கின்றன. ஏழுகன்னியர் சிற்பங்கள் வழிபாடின்றி தனிச்சிற்பங்களாக உள்ளன.
தலத்தின் சிறப்பு 1100 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது.
சுருக்கம்
கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இக்கோயில் வழிபாட்டில் இருந்துள்ளது. திருஞானசம்பந்தரால் தேவார பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. புள்ளமங்கை ஒரு பிரமதேயம் ஆகும். நான்குவேதங்கள் ஓதும் பிராமணர்க்கு வழங்கப்படும் நிலம் பிரமதேயமாகும். புள்ளமங்கையில் மகாசபை செயல்பட்டு வந்துள்ளது. முதலாம் பராந்தகச் சோழனின் கலைக் கோயிலாக திகழ்கிறது. இறைவன் ஆலந்துறை மகாதேவர் என்று இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்படுகிறார். காவிரியின் தென்கரைத் தலங்களுள் ஒன்றாக இக்கோயில் விளங்குகிறது. இக்கோயில் தாங்குதளம் முதல் கலசம் வரை கற்றளியாக கட்டப்பட்டுள்ளது. வெற்றியின் நினைவாக எழுப்பப்படும் ஜயத விமானம் இக்கோயிலுடையதாகும். கோயிலின் விமானம் 3 தளங்களுடன் நாகரபாணியில் அமைந்துள்ளது. கருவறை விமானம் சுவர்களில் உள்ள தேவக்கோட்டங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறை, அர்த்தமண்டபம் சோழர் கலைப்பாணியில் உள்ளது. கருவறை சதுர வடிவமானது. இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். அர்த்தமண்டபத்தில் வாயிற்காவலர்களும், நாற்புறமும் கூரைப்பகுதியில் செல்லும் பூதவரிகளும் உள்ளன. அர்த்தமண்டபத்தில் சோழர்கால உருளைத்தூண்கள் தரங்கப் போதிகை பெற்று விளங்குகின்றன. விமானத்தின் கூரைப்பகுதியில் ஆடல்மங்கையர் வடிவங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. கருவறை விமான தாங்குதளம் அகழி அமைப்புடையது. விமானத்தின் முதல் தளத்தில் கோட்டங்களில் சிவனின் பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன. புள்ளமங்கை கோயிலில் தேவக்கோட்டத்தில் முறையே தெற்கில ஆலமர்செல்வனும், மேற்கே அண்ணாமலையாரும், வடக்கே நான்முகனும் காட்டப்பட்டுள்ளனர். அர்த்தமண்டப கோட்டத்தில் தெற்கில் கணபதியும், வடக்கில் மகிஷமர்த்தினியும் அமைந்துள்ளனர். தாங்குதளத்தில் இராமாயண புடைப்புச் சிற்பங்களும், சிவவடிவங்களும் வரிசையாகக் காட்டப்பட்டுள்ளன. அர்த்தமண்டபத்தில் வாயிற்காவலர்கள் உள்ளனர். மண்பத்தின் நாற்புறமும் செல்லும் பூதவரிகள் காணப்படுகின்றன. மேலும் அம்மண்டபத்தில் உள்ள தூண்களில் மாலைத் தொங்கல் பகுதியில் புடைப்புச் சிற்பங்களாக ஆடல் மகளிர் காட்டப்பட்டுள்ளனர். கருவறை விமானத்தின் கூரைப்பகுதியில் ஆடல் மங்கையர் காட்டப்பட்டுள்ளனர். மேலும் ஆடல் பாடலுடன் பூதகணங்களும் வரிசையாக செல்கின்றன. ஏழுகன்னியர் சிற்பங்கள் வழிபாடின்றி தனிச்சிற்பங்களாக உள்ளன. புள்ளமங்கை கோயிலில் 21 கல்வெட்டுகள் உள்ளன. 18 கல்வெட்டுகள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. புள்ளமங்கலம் கோயிலில் முதலாம் பராந்தகனின் 3-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டே காலத்தால் முந்தியது. இதன் மூலம் அந்த அரசனே இக்கோயிலைக் கட்டியுள்ளான் என்பதும் உறுதிப்படுகிறது. புள்ளமங்கை கோயிலுக்கு அளிக்கப்பட்ட விளக்குக் கொடைகள் அனைத்தும் நிலக்கொடைகளாகவே வழங்கப்பட்டுள்ளன. சோழர்கள் காலத்தில் கோயில்கள் நிலவுடைமை சமுதாயத்தை சார்ந்திருந்தது என்பதை இது காட்டுகிறது. ஆதித்த கரிகாலன் காலத்து கல்வெட்டொன்று இக்கோயிலில் உள்ள காளாபிடாரிக்கு கொடையளித்த விவரத்தைக் கூறுகிறது. இதற்குக் கொடையளித்தவர்கள் யாவரும் பிராமணரல்லாதவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளமங்கை ஒரு மகாசபையாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த மகாசபையை சேர்ந்தவர்கள் அனைவரும் பிராமணர் அல்லாதவர்களாக இருந்தனர். முதலாம் இராசராசனின் 12-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு சந்திரகிரகணத்தன்று சபை கூடியதைக் குறிப்பிடுகிறது. மகாசபையில் கணக்கு காட்டாமல் விட்ட குற்றம், கொலைக்கு தண்டனையாக விளக்கெரித்தல் ஆகிய கல்வெட்டுகள் குறிப்பிடத்தக்கன. கங்கமன்னன் இரண்டாம் பிருதிவிபதி என்பவன் பராந்தகனுக்கு வல்லம் போரில் துணை நின்றவன். அம்மன்னன் கோயிலுக்கு நிலம் கொடையளித்துள்ளான். கோயிலுக்கு திமிலை என்னும் வாத்தியக் கருவி இசைக்கும் கலைஞர்களுக்கு இவ்வூர் சபையார் ஸ்ரீகண்டமங்கலத்து கிழார் என்னுமிடத்தில் உள்ள நிலத்தினை கொடையாக கொடுத்துள்ளனர்.
புள்ளமங்கை சிவன் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் தாங்குதளம் முதல் கலசம் வரை கற்றளியாக கட்டப்பட்டுள்ளது. வெற்றியின் நினைவாக எழுப்பப்படும் ஜயத விமானம் இக்கோயிலுடையதாகும். கோயிலின் விமானம் 3 தளங்களுடன் நாகரபாணியில் அமைந்துள்ளது. கருவறை விமானம் சுவர்களில் உள்ள தேவக்கோட்டங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறை, அர்த்தமண்டபம் சோழர் கலைப்பாணியில் உள்ளது. கருவறை சதுர வடிவமானது. இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். அர்த்தமண்டபத்தில் வாயிற்காவலர்களும், நாற்புறமும் கூரைப்பகுதியில் செல்லும் பூதவரிகளும் உள்ளன. அர்த்தமண்டபத்தில் சோழர்கால உருளைத்தூண்கள் தரங்கப் போதிகை பெற்று விளங்குகின்றன. விமானத்தின் கூரைப்பகுதியில் ஆடல்மங்கையர் வடிவங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. கருவறை விமான தாங்குதளம் அகழி அமைப்புடையது. விமானத்தின் முதல் தளத்தில் கோட்டங்களில் சிவனின் பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் பசுபதி நாதர் கோயில், தஞ்சை பெரிய கோயில், கும்பகோணம் கோயில்கள்
செல்லும் வழி தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பசுபதி கோயில் என்ற கிராமத்திற்கு தெற்கே புள்ளமங்கை அமைந்துள்ளது. தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும்வழியில் அய்யம்பேட்டைக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து 14.5 கி.மீ. தொலைவில் பசுபதி கோயில் இரயில் நிலையத்திலிருந்து இக்கோயிலை சென்றடையலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 -12.30முதல் மாலை 4.30-8.30 வரை
புள்ளமங்கை சிவன் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் தஞ்சாவூர், கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி கும்பகோணம், தஞ்சாவூர் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் கோ.சசிகலா
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் மதுரை கோ.சசிகலா
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 54
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்