வழிபாட்டுத் தலம்
பல்லாவரம் ஹசரத் சையத் பத்ருதீன் ஷாகித் தர்கா
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | பல்லாவரம் ஹசரத் சையத் பத்ருதீன் ஷாகித் தர்கா |
|---|---|
| ஊர் | பல்லாவரம் |
| வட்டம் | தாம்பரம் |
| மாவட்டம் | சென்னை |
| உட்பிரிவு | 8 |
| வழிபாடு | ஐந்து காலத் தொழுகை |
| திருவிழாக்கள் | ரமலான், பக்ரீத், மிலாடி நபி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.16-ஆம் நூற்றாண்டு |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இறை உருவங்கள், மனித உருவங்கள் மற்றும் விலங்குகள் போன்றவை செதுக்கப்படவில்லை. அது இசுலாத்தின் இறைக்கொள்கைக்கு எதிரானது. |
| தலத்தின் சிறப்பு | 400 ஆண்டுகள் பழமையானது. |
|
சுருக்கம்
கி.பி.1646-ஆம் ஆண்டு கோல்கொண்டா சுல்தான் அரசு சென்னை சாந்தோம் போர்த்துக்கீசிய கோட்டையை தாக்கியது. மீ்ர் சும்லா என்பவரின் தலைமையில் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளரிடமிருந்து பீரங்கி ஒன்றைப் பெற்று இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சாந்தோம் போர்த்துக்கீசிய கோட்டை தாக்குதல் போரில் கோல்கொண்டா சுல்தான் அரசைச் சேர்ந்த ஹசரத் சையத் பத்ருதீன் ஷாகித் என்னும் குதிரைப்படை வீரன் கலந்து கொண்டு வெற்றிக்கொடி நாட்டினார். வெற்றியின் பின்னர் போர்த்துக்கீசிய மாலுமி ஒருவரால் பின்புறம் இருந்து தாக்கப்பட்டு இறந்தார். அவரது நினைவிடமே பல்லாவரத்தில் உள்ள ஹசரத் சையத் பத்ருதீன் ஷாகித் தர்கா ஆகும்.
|
|
பல்லாவரம் ஹசரத் சையத் பத்ருதீன் ஷாகித் தர்கா
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | பல்லாவரம் தர்ஹா கமிட்டி மற்றும் ஜமாத்தார்கள் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | பல்லாவரம் தொல்லியல் கற்கருவிகள் |
| செல்லும் வழி | சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள பல்லாவரத்திற்கு புறநகர் இரயில்கள் இயக்கப்படுகின்றன. பல்லாவரத்திற்கு எழும்பூர், கோயம்பேடு, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்துகளும் செல்கின்றன. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 5.00 முதல் பகல் 12.00 மணி வரை மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 31 |
| பிடித்தவை | 0 |