வழிபாட்டுத் தலம்
பிரகாச மாதா ஆலயம்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | பிரகாச மாதா ஆலயம் |
|---|---|
| வேறு பெயர்கள் | லஸ் சர்ச் |
| ஊர் | மயிலாப்பூர் |
| வட்டம் | மயிலாப்பூர் |
| மாவட்டம் | சென்னை |
| உட்பிரிவு | 8 |
| மூலவர் பெயர் | பிரகாச மாதா |
| தாயார் / அம்மன் பெயர் | பிரகாச மாதா |
| திருவிழாக்கள் | பிரகாச மாதா திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி துவங்கும். 15-ஆம் தேதி முடிவடையும். ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 15 அன்று பிரகாச மாதா விருந்து கொண்டாடப்படுகிறது. |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி. 1516 |
| கல்வெட்டு / செப்பேடு | கோயிலின் முகப்பிலேயே கட்டிய ஆண்டு 1517 என்று பொறித்துள்ளனர். |
| சுவரோவியங்கள் | ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கீழ் வழிபாட்டில் உள்ள இந்த பிரகாச மாதா தேவாலயத்தின் சுவர்களில் பிரகாச மாதா, இயேசு, திருத்தூதர்கள் ஆகிய கண்ணாடியில் வரையப்பட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன. |
| சிற்பங்கள் | பிரகாச மாதாவின் சிற்பம் அமைந்துள்ளது. |
| தலத்தின் சிறப்பு | 500 ஆண்டுகள் பழமையானது. சென்னையிலுள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். |
|
சுருக்கம்
பிரகாச மாதா ஆலயம் சென்னையிலுள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இது பொதுவாக உள்ளூர் வட்டத்தில் போர்த்துக்கீசியத்தில் உள்ள பெயரான நோசா சென்ஹோரா டா லஸ் (Nossa Senhora da Luz) என்பதை ஒட்டி லஸ் சர்ச் என்று அழைக்கப்படுகிறது. 1516ஆம் ஆண்டு போர்த்துக்கீசியர்களால் கட்டப்பட்ட இந்த தேவாலயம் சென்னையின் மிகப்பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும். இதன் அடித்தளம் இந்தியாவில் ஐரோப்பிய கட்டிடங்களில் மிகப் பழமையான ஒன்றாக குறிக்கப்படுகின்றது. இது பதினாறாம் நூற்றாண்டில் தரைவழி மார்க்கமாக கிறித்தவ சமயத்துறவிகள் வந்தடைந்ததையும் குறிக்கிறது. சாந்தோம் தேவாலயத்திற்கு மிக அண்மையில் உள்ளது.
|
|
பிரகாச மாதா ஆலயம்
| கோயிலின் அமைப்பு | பதினாறாம் நூற்றாண்டு ஐரோப்பியக் கட்டிடத்தில் கோதிக் வளைவுகளும் பரோக்கிய அலங்காரங்களும் காணப்படுகின்றன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | ரோமன் கத்தோலிக்க திருச்சபை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | சாந்தோம் தேவாலயம், கபாலீசுவரர் கோயில், முண்டகக்கண்ணியம்மன் கோயில் |
| செல்லும் வழி | மயிலாப்பூர் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள சாந்தோம் தேவாலயத்தின் அருகில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 20 Jul 2017 |
| பார்வைகள் | 400 |
| பிடித்தவை | 0 |