வழிபாட்டுத் தலம்
திருத்தஞ்சை மாமணிக் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருத்தஞ்சை மாமணிக் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | பராசர சேத்ரம், வம்புலாஞ்சோலை, அழகாபுரி, கருடாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர் |
| ஊர் | மணிக்குன்றம் |
| வட்டம் | திருவையாறு |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | நரசிம்மன் |
| தாயார் / அம்மன் பெயர் | தஞ்சை நாயகி |
| திருக்குளம் / ஆறு | சூர்ய புஷ்கரணி |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | வைகுண்ட ஏகாதசி, இராமநவமி, நரசிம்ம ஜெயந்தி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் நரசிம்மப் பெருமாள் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் உள்ளார். |
| தலத்தின் சிறப்பு | 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. |
|
சுருக்கம்
முன்காலத்தில் தஞ்சை நகரில் வெவ்வேறு இடங்களில் இருந்தது. நீலமேகப் பெருமாள் மணிமுத்தா நதியருகேயும், மணிக்குன்னப் பெருமாள் தஞ்சையருகேயுள்ள களிமேட்டுப் பகுதியிலும், நரசிங்கப்பெருமாள் ஸ்ரீனிவாசபுரம் செவப்ப நாயக்கர் குளமருகில் உள்ள சிங்கப்பெருமாள் குளத்தருகேயும் இருந்தது. பிற்காலத்து நாயக்க மன்னர்களால் தஞ்சையிலிருந்து பெயர்க்கப்பட்டு இப்போதுஉள்ளவாறு அமைக்கப்பட்டது. பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசமிது. தஞ்சையைப் பார்த்த வண்ணம் விக்ரஹங்கள் அமைந்திருப்பதால் தஞ்சையைக் காத்தருளும் தெய்வம் என்றும் தஞ்சை மாமணி யென்றும் போற்றப்படுகிறது.
|
|
திருத்தஞ்சை மாமணிக் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் குன்று போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. வேதசுந்தர விமானம் என்ற கட்டடக்கலை வடிவமைப்பு இக்கோயில் கருவறை விமானம் அமைந்துள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருக்கண்டியூர், திருவேள்விக்குடி, திருச்சோற்றுத்துறை, ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில் |
| செல்லும் வழி | இத்தலம் தஞ்சை நகரைத் தாண்டியதும் அமைந்துள்ள வெண்ணாற்றங்கரை மீது அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Nov 2018 |
| பார்வைகள் | 29 |
| பிடித்தவை | 0 |