Back
வழிபாட்டுத் தலம்
கடப்பா நவாப் ஹலுல் மக்பிரா தர்ஹா
வழிபாட்டுத் தலத்தின் பெயர் கடப்பா நவாப் ஹலுல் மக்பிரா தர்ஹா
வேறு பெயர்கள் வல்லாபுரம் தர்ஹா
ஊர் வல்லாபுரம்
வட்டம் வேப்பந்தட்டை
மாவட்டம் பெரம்பலூர்
உட்பிரிவு 8
வழிபாடு ஐந்து காலத் தொழுகை
திருவிழாக்கள் ரமலான், பக்ரீத், மிலாடி நபி
காலம் / ஆட்சியாளர் கி.பி.17-ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் இறை உருவங்கள், மனித உருவங்கள் மற்றும் விலங்குகள் போன்றவை செதுக்கப்படவில்லை அது இசுலாத்தின் இறைக்கொள்கைக்கு எதிரானது.
தலத்தின் சிறப்பு 300 ஆண்டுகள் பழமையானது.
சுருக்கம்
சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரம் அருகே உள்ள வல்லாபுரம் எனும் சிற்றூர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. இவ்வூரில் கடப்பா நவாப் ஹலுல் மக்பிரா தர்ஹா எனும் தர்ஹா இருக்கின்றது. இத்தர்ஹா திராவிட – இஸ்லாமிய கட்டிடக்கலை பாணியில் எளிமையாகவும் உயரமாகவும் காணப்படுகின்றது. இங்குள்ள பிரதான கட்டிடம் சுமார் 25 அடி உயரம் உள்ள 12 கற்தூண்கள் மற்றும் கற்கூரையுடன் திறந்த வெளி மண்டபம் போல எழுப்பப்பட்டுள்ளது. இதன் மையப்பகுதியில் நான்கு புற சுற்றுச் சுவருடன் தர்ஹா உருவாக்கப்பட்டுள்ளது. இம் மண்டபத்திற்கு பின்புறம் சிறிய மசூதி இஸ்லாமியக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. அதற்கு பின்புறம் கற்சுவருடன் பெரிய கிணறு நல்ல வேலைப்பாட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தர்ஹாவுக்கு அருகே பல கல்லறைகள் வெவ்வேறு வடிவங்களில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுக்கள் மற்றும் பிற சான்றுகள் இல்லாத நிலையில் இதன் கட்டுமானத்தைக் கொண்டு இவை 16 – 17 ம் நூற்றாண்டில் எழுப்பியிருக்கக்கூடும் என கருதலாம்.
கடப்பா நவாப் ஹலுல் மக்பிரா தர்ஹா
கோயிலின் அமைப்பு இத்தர்ஹா திராவிட – இஸ்லாமிய கட்டிடக்கலை பாணியில் எளிமையாகவும் உயரமாகவும் காணப்படுகின்றது. இங்குள்ள பிரதான கட்டிடம் சுமார் 25 அடி உயரம் உள்ள 12 கற்தூண்கள் மற்றும் கற்கூரையுடன் திறந்த வெளி மண்டபம் போல எழுப்பப்பட்டுள்ளது. இதன் மையப்பகுதியில் நான்கு புற சுற்றுச் சுவருடன் தர்ஹா உருவாக்கப்பட்டுள்ளது. இம் மண்டபத்திற்கு பின்புறம் சிறிய மசூதி இஸ்லாமியக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. அதற்கு பின்புறம் கற்சுவருடன் பெரிய கிணறு நல்ல வேலைப்பாட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தர்ஹாவுக்கு அருகே பல கல்லறைகள் வெவ்வேறு வடிவங்களில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் வல்லாபுரம் தர்ஹா கமிட்டி மற்றும் ஜமாத்தார்கள்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் ரஞ்சன்குடி கோட்டை
செல்லும் வழி சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரம் அருகே உள்ள வல்லாபுரம் எனும் சிற்றூர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. இவ்வூரில் கடப்பா நவாப் ஹலுல் மக்பிரா தர்ஹா எனும் தர்ஹா இருக்கின்றது.
கோவில் திறக்கும் நேரம் காலை 5.00 முதல் பகல் 12.00 மணி வரை மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை
கடப்பா நவாப் ஹலுல் மக்பிரா தர்ஹா
அருகிலுள்ள பேருந்து நிலையம் வல்லாபுரம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் பெரம்பலூர்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி வாலிகண்டபுரம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் க.த.காந்திராஜன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 157
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்