வழிபாட்டுத் தலம்
கூவம் கேசாவரம் சிவன் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | கூவம் கேசாவரம் சிவன் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | காசி விசுவநாதர் கோயில் |
| ஊர் | கேசாவரம் |
| வட்டம் | திருவள்ளூர் |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | காசி விசுவநாதர் |
| தாயார் / அம்மன் பெயர் | அன்னபூரணி |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | மகாசிவராத்திரி, ஆடிப்பூரம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி ஆரூத்ரா தரிசனம், பங்குனி பிரம்மோத்சவம், மாசி தெப்போத்சவம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு / பல்லவர், முற்காலச் சோழர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் சிவலிங்க வடிவாக இறைவன் எழுந்தருளியுள்ளார். தேவகோட்டங்களில் உள்ள சிற்பங்களில் தென்முகக் கடவுள், இலிங்கோத்பவர், நான்முகன் சோழர் படைப்பாகும். அர்த்தமண்டப வெளிப்புற வடக்குக் கோட்டத்தில் மகிடமர்த்தினியும், தென்புறக் கோட்டத்தில் கணபதியும் உள்ளனர். கொடுங்கையின் கீழ் பூதவரிகள் காட்டப்பட்டுள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 900 ஆண்டுகள் பழமையானது. தூங்கானை மாடக் கோயில். |
|
சுருக்கம்
கூவம் ஆற்றின் கரையில் கேசாவரம் என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. தூங்கானை மாட வடிவில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் முழுவதும் கற்றளி.
|
|
கூவம் கேசாவரம் சிவன் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் தூங்கானை மாட வடிவில் அமைந்துள்ளது. முழுவதும் கற்றளியாக விளங்கும் இக்கோயில் சோழர் கால கலைப்பாணி. தாங்குதளத்திலும், சுவர்ப்பகுதியிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கொடுங்கையின் கீழ் பூதவரிகள் காட்டப்பட்டுள்ளன. கருவறையைத் தொடர்ந்து அர்த்தமண்டபம், முகமண்டபம் விளங்குகிறது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருவாலங்காடு, வீரராகவப் பெருமாள் கோயில், திருத்தணி |
| செல்லும் வழி | கூவம் என்ற பெயரில் தற்போது அறியப்படும் இத்தலம் திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையிலிருந்து சுமார் 50 கி.மி. தொலைவில் இருக்கிறது. இத்தலத்தின் அருகே தான் கூவம் ஆறு உற்பத்தியாகிறது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 -11.00 மணி இரவு 5.00 - 8.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 21 Mar 2019 |
| பார்வைகள் | 73 |
| பிடித்தவை | 0 |