வழிபாட்டுத் தலம்
பேரையூர் மொட்டை மலை தர்கா
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | பேரையூர் மொட்டை மலை தர்கா |
|---|---|
| வேறு பெயர்கள் | பேரையூர் தர்கா |
| ஊர் | பேரையூர் |
| வட்டம் | உசிலம்பட்டி |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 8 |
| திருக்குளம் / ஆறு | பேரையூர் மொட்டைமலை சுனை |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.16-ஆம் நூற்றாண்டு |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இறை உருவங்கள், மனித உருவங்கள் மற்றும் விலங்குகள் போன்றவை செதுக்கப்படவில்லை அது இசுலாத்தின் இறைக்கொள்கைக்கு எதிரானது. ந |
| தலத்தின் சிறப்பு | 300 ஆண்டுகள் பழமையானது. |
|
சுருக்கம்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்தில் உள்ள பேரையூர் என்னும் ஊரில் உள்ள மொட்டை மலை என்றழைக்கப்படும் மலையின் உச்சியில் ஒரு சிவன் கோயிலும், கன்னிமார் கோயிலும், சுனை ஒன்றும் அமைந்துள்ளது. அவைகளுக்கும் சற்று உயரத்தில் யாக்கோபு என்னும் மறைந்த இசுலாமியப் பெரியவருக்கு எடுப்பிக்கப்பட்ட தர்கா ஒன்று வழிபாட்டில் உள்ளது.
|
|
பேரையூர் மொட்டை மலை தர்கா
| கோயிலின் அமைப்பு | பேரையூர் மலையின் உச்சியில் காணப்படும் இந்த தர்கா அடக்க தலமாகக் கருதப்படுகிறது. 7 அடிக்கும் அதிகமான நீளத்தில் இந்த அடக்கத்தலம் நீண்டு கட்டப்பட்டுள்ளது. நீண்ட பெட்டி வடிவில் அடித்தளம் கருங்கல்லாலும், மேலே செங்கல் மற்றும் சுண்ணாம்பு பூச்சினைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | பேரையூர் தர்ஹா கமிட்டி மற்றும் ஜமாத்தார்கள் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | பேரையூர் மலை உச்சி சிவன் கோயில், கன்னிமார் கோயில் |
| செல்லும் வழி | மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பேரையூர் செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 5.00 முதல் பகல் 12.00 மணி வரை மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 37 |
| பிடித்தவை | 0 |