Back
வழிபாட்டுத் தலம்
வடுவூர் கோதண்டராமஸ்வாமி கோவில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் வடுவூர் கோதண்டராமஸ்வாமி கோவில்
வேறு பெயர்கள் ஸ்ரீகோதண்டராமஸ்வாமி
ஊர் வடுவூர்
வட்டம் மன்னார்குடி
மாவட்டம் திருவாரூர்
தொலைபேசி 04367 -267110
உட்பிரிவு 2
மூலவர் பெயர் ஸ்ரீகோதண்டராமஸ்வாமி
தாயார் / அம்மன் பெயர் சீதை
தலமரம் வகுளமரம் (மகிழமரம்)
திருக்குளம் / ஆறு ஸரயூபுஷ்கரணி
ஆகமம் பஞ்சராத்திர ஆகமம்
வழிபாடு விச்வரூபம், திருவனந்தல், காலசந்தி, உச்சிக்காலம், திருமாலை(தோசைத்தளிகை), இராக்காலம், அர்த்தஜாமம்
திருவிழாக்கள் பிரம்மோத்ஸவத்தில் தேர்த்திருவிழா
காலம் / ஆட்சியாளர் கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு / தஞ்சை சரபோஜி வம்சத்தினர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் மூலவர் ஸ்ரீ கோதண்டராமர் (ஸ்ரீ சீதா பிராட்டி, லட்சுமணர் , ஹனுமன் சமேதராய் திருக்கல்யாண கோலத்தில்) திருவீதியுலா நாயகர் (உற்சவர்) – மேற்கண்ட அதே கோலத்தில் விளங்குகிறார். நாச்சியாரான சீராபிராட்டிக்குத் தனிசந்நதி இல்லை. இத்தலத்தில் ஆதிபெருமாள் ருக்மிணி- சத்தியபாமா உடனுறை கோபாலனே. (கருவறையில் ராமன் எழுந்தருளிய பின் மகாமண்டபத்தின் வடக்குப்பக்கம் உள்ள திருப்பள்ளி அறையில் கோபாலன் சிறுகோயில் அமைந்துள்ளது.
தலத்தின் சிறப்பு 300 ஆண்டுகள் பழமையானது. கண்வமகரிஷி, குலசேகரப்பெருமாள் இத்தல இறைவனை வழிபட்டு பேறுபேற்றோர் ஆவர்.
சுருக்கம்
தஞ்சை மாவட்டத்திலேயே 316-15 ஏக்கர் பரப்புள்ள மிகப்பெரிய ஏரியான ஸ்ரீகோதண்டராமர் ஏரி இவ்வூரில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான இந்த ஏரி 1911 ஆம் ஆண்டு பராமரிக்க முடியாமல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அழகிய ஊர் , இளமையான ஊர் எனும் பொருளில் வடுவூர் எனப்படும் இத்தலத்திற்கு வகுளாரண்யம் (மகிழங்காடு), பாஸ்கர க்ஷேத்திரம், தக்ஷண அயோத்தி எனும் திருப்பெயர்களும் உண்டு. பல்லக்கு, திருச்சிவிகை, 3 திருநாமங்களுடன் சூரியப்பிரபை, சேக்ஷவாகனம், கருடவாகனம், ஹனுமன்வாகனம், யானை வாகனம், ஹம்சவாகனம், குதிரை வாகனம். ஸ்ரீராமாயணக்காட்சிகளை சித்தரிக்கும் பழைய திருத்தேர் ஒன்று உண்டு. கண்வமகரிஷி, குலசேகரப்பெருமாள் இத்தல இறைவனை வழிபட்டு பேறுபேற்றோர் ஆவர்.
வடுவூர் கோதண்டராமஸ்வாமி கோவில்
கோயிலின் அமைப்பு கருவறை விமானம் இரு தளங்களை உடையது. தாங்குதளம் முதல் கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், அதற்கு மேல் உள்ள பகுதி சுதையாலும் அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் தளத்தில் சுதைச் சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், மகாமண்டபம், இராஜகோபுரம், நுழைவுவாயில் மண்டபம் ஆகியன இக்கோயிலில் அமைந்துள்ளன. கருவறை விமானம் புஷ்பவிமானமாக அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் வெற்றுக் கோட்டங்கள் அமைந்துள்ளன. எளிய அமைப்புடைய கருவறை விமானமாகவே இக்கோயில் விமானம் அமைந்துள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் மன்னார்குடி இராஜகோபாலசுவாமி கோயில், மன்னார்குடி கைலாசநாதர் கோயில், திருவாரூர் சிவன் கோயில்
செல்லும் வழி மன்னார்குடி வட்டத்தில் மன்னார்குடி பேருந்து நிலையத்திலிருந்து வடுவூர் சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00-12.30 முதல் மாலை 5.00-9.30 வரை
வடுவூர் கோதண்டராமஸ்வாமி கோவில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் தஞ்சாவூர், மன்னார்குடி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் தஞ்சாவூர், மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி, சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி திருவாரூர் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 45
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்