வழிபாட்டுத் தலம்
தற்காகுடி சிவன் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | தற்காகுடி சிவன் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | திருக்கோட்டீஸ்வரர் |
| ஊர் | தற்காகுடி |
| வட்டம் | விராலிமலை |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | திருக்கோட்டீஸ்வரர் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.13-ஆம் நூற்றாண்டு / பிற்காலப் பாண்டியர் |
| கல்வெட்டு / செப்பேடு | பராக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன், வீரபாண்டியன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுகள் இக்கோயில் சுவர்களின் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகளைக் கொண்டு இக்கோயில் கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனலாம். இக்கல்வெட்டுகள் கோயிலுக்கான நிலக்கொடைகளைத் தெரிவிக்கின்றன. இக்கோயில் இறைவன் “திருக்கோட்டீஸ்வரர்“ என்றும், ஊர் தளுக்காய்குடி என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | விமானம் கூரைப்பகுதியில் யாளி வரிசை செல்கிறது. யாளி வரிசையின் நடுவே யானைத்திருமகள் (கஜலெட்சுமி) புடைப்புச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. கூரையின் கொடுங்கையில் (கபோதம்) உள்ள கூடு முகங்களில் சிறிய புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் இரண்ய வதம், மயில் சிவ பூசை செய்தல், கணபதி சிவபூசை செய்தல், அனுமன், குரங்கு, ஆடல் ஆகிய புடைப்புச் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. அம்மன், தென்முகக் கடவுள் (தட்சிணாமூர்த்தி), நந்தி, முருகன், கணபதி ஆகிய பிற்காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள் காணப்படுகின்றன. |
| தலத்தின் சிறப்பு | 700ஆண்டுகள் பழமையானது. பிற்கால பாண்டியர் கால கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது. |
|
சுருக்கம்
மதுரையிலிருந்து திருச்சிக்கு செல்லும் சாலையில் தற்காகுடி என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இவ்வூரின் குளக்கரையில் ஒரு பிற்காலப் பாண்டியர் கால சிவன் கோயில் உள்ளது. இதன் சுவர்களில் உள்ள பிற்காலப் பாண்டியர்களான பராக்கிரம பாண்டியன், வீரபாண்டியன், குலசேகரபாண்டியன் ஆகியோரது கல்வெட்டுகளைக் கொண்டு இக்கோயில் 13-ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது எனலாம். மேலும் இக்கோயில் கல்வெட்டுகளில் திருக்கோட்டீஸ்வரர் கோயில் என்றும், ஊர் தளுக்காய்குடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சிறு கருவறை, அர்ததமண்டபத்துடன் இன்று காட்சியளிக்கும் இக்கோயில், தொடக்கத்தில் திருச்சுற்று மதிலுடன் கூடிய விரிவான கோயிலாக இருந்துள்ளது. விநாயகர், முருகன், பைரவர், அம்மன் ஆகிய தெய்வங்களுக்கான சிற்றாலயங்களும், நந்தி மண்டபமும் தொடக்கத்தில் கட்டப்பட்டிருந்தன. தற்போது அவை புனரமைக்கப்பட்டுள்ளது.
|
|
தற்காகுடி சிவன் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை மட்டும் கொண்டதாக தற்போது விளங்குகிறது. எளிய அமைப்புடைய இக்கோயில் கோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் இடம்பெறவில்லை. கோட்டங்களில் தெய்வங்களை அமைக்காதிருப்பது பாண்டியர்களின் கலைப்பாணியாகும். கருவறை சதுர வடிவமுடையது. கருவறை விமானம் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் உள்ளன. கூரைப்பகுதியில் பூமிதேசத்தில் யாளி வரிசை செல்கிறது. தாங்குதளத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முழுவதும் சிதிலமடைந்த இக்கோயில் பழமைத் தன்மையாக அதன் எச்சங்களைக் காட்டி நிற்கிறது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | |
| செல்லும் வழி | மதுரையிலிருந்து திருச்சிக்கு செல்லும் சாலையில் தற்காகுடி என்னும் சிற்றூரில் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோயில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 43 |
| பிடித்தவை | 0 |