வழிபாட்டுத் தலம்
நெடுங்களநாதர் திருக்கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | நெடுங்களநாதர் திருக்கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | நித்தியசுந்தரேசுவரர் கோயில் |
| ஊர் | திருநெடுங்களம் |
| வட்டம் | திருச்சி |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | நித்யசுந்தரேஸ்வரர், நெடுங்களநாதர் |
| தாயார் / அம்மன் பெயர் | மங்களநாயகி, ஒப்பிலா நாயகி |
| தலமரம் | வில்வம் |
| திருக்குளம் / ஆறு | அகத்திய தீர்த்தம், சுந்தர தீர்த்தம் |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | நவராத்திரி, பிரதோஷ காலங்கள், தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகத்தில் பெருவிழா |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு / பல்லவர், சோழர், பாண்டியர், விசயநகர-நாயக்கர் |
| கல்வெட்டு / செப்பேடு | கல்வெட்டில் இத் தலம் “பாண்டிகுலாசினி வளநாட்டு வடவீர நாட்டு திரு நெடுங்களம்” என்றும் ;இறைவன் பெயர் ‘நெடுங்களத்து மகாதேவர்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளது. 30-6-1999ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்தலத்தில் 30க்கு மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | நெடுங்களப் பதிகத்தில் வரும் பாடற் கருத்துக்கள் அனைத்தும் ராஜ கோபுரத்தில் முன்னும் பின்னும் சுதை சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம், சதுர்ப்புஜம். தவஞ்செய்த அம்பிகையை இறைவன் கள்ள உருவில் தோன்றிக் கைத்தலம் பற்ற, அச்சமுற்று அம்பிகை ஓடியொளிந்த இடம், ஒளிமதிச்சோலை என்று வழங்குகிறது. மூலவர்-நிறைவான மூர்த்தி-‘நினைவார்தம் இடர்களையும்’ நிமலனின் தரிசனம். மூலத்தானத்தின் மேல் இரு விமானங்கள் அமைந்து புதுமையாகக் காட்சியளிக்கின்றன. இங்குள்ள தட்சிணாமூர்த்தி விந்தையான அமைப்புடையது - யோக தட்சிணாமூர்த்தி, சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறதாம். |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். |
|
சுருக்கம்
சம்பந்தர், பாடல் பெற்றது. சிறிய ஊர், பழைய கோயில். அகத்தியர் வழிபட்டது.
|
|
நெடுங்களநாதர் திருக்கோயில்
| கோயிலின் அமைப்பு | சிறிய ஊர், பழைய கோயில். அகத்தியர் வழிபட்டது. இராஜகோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. அம்பாள் ஆலயம் வெளிப்புறம் அமைந்துள்ளது. உற்சவ மூர்த்தங்கள் சோமாஸ்கந்தர், விநாயகர், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் முதலியன சிறப்பாகவுள்ளன. இங்குள்ள வெண்கலக்குதிரை விந்தையான அமைப்புடையது. மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக்கல்உரல் சிறந்த வேலைப்பாடமைந்தது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருவெறும்பூர், துடையூர் விஷமங்களேசுவரர் கோயில் |
| செல்லும் வழி | திருச்சி – தஞ்சைசாலையில் வந்து, துவாக்குடி என்னுமிடத்தில் பிரியும் சாலையில் 4 கி.மீ. சென்று நெடுங்களத்தையடையலாம். திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து திருநெடுங்களத்திற்குநகரப் பேருந்து உள்ளது. திருச்சி - மாங்காவனம், நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Nov 2018 |
| பார்வைகள் | 38 |
| பிடித்தவை | 0 |