வழிபாட்டுத் தலம்
தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | பெரியநாயகி அம்மன் கோயில் |
| ஊர் | தேவிகாபுரம் |
| வட்டம் | ஆரணி |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| தொலைபேசி | +91-4173-247 482, 247 796 |
| உட்பிரிவு | 3 |
| தாயார் / அம்மன் பெயர் | பெரிய நாயகி |
| தலத்தின் சிறப்பு | 800 ஆண்டுகள் பழமையானது. |
|
சுருக்கம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலைக்கு அடுத்த பெரிய கோயிலாகவும் விஜயநகர கட்ட்டக்கலைக்கு சிறந்த சான்றாகவும் அமைந்துள்ளது பெரியநாயகி அம்மன் ஆலயமும் மலைமீதுள்ள பொன்மலைநாதர் ஆலயமும் ஆகும். இக்கோயில்களில் சுமார் 10000 க்கும் மேற்பட்ட சிற்பங்களும், 60 கல்வெட்டுகளும் உள்ளன. விஜயநகர பேரரசர் காலத்தில் புகழ்பெற்ற வணிக நகராகவும், ஆன்மிக தலமாகவும் விலங்கி வந்தது. இக்கோயில் அக்காலத்தில் ஊரின் நிர்வாக அமைப்பாக செயல்பட்டுள்ளது. பெரியநாயகி அம்மன் கோயில் மதில் சுவர் , கல்யாணமண்டபம், மகாமண்டபம், கருவறை ஆகிய இடங்களில் சைவ, வைணவச் கதைச் சிற்பங்கள் எழிலுற அமைந்துள்ளன. தேவராக் கதைச்சிற்பங்கள், விஷ்ணுவின் அவதாரச்சிற்பங்கள், தலவரலாற்றுச்சிற்பங்கள் போன்றவை காணத்தகுந்தவை ஆகும். இக்கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ள திருகாமேஸ்வரர் சம்மே கோகிலாம்பாள் ஆலயமும் அதன் அருகில் சுமார் 500 அடி உயர மலையில் அமைந்துள்ள பொன்மலைநாதர் திருக்கோயிலும் சிற்ப எழில் கொண்ட கோயில்களாகும்.
|
|
தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் ஊரின் நடுவே அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக 475 அடி நீளமும் வடக்கு தெற்காக 250 அடி அகலமும் 30 அடி உயரம் கொண்ட அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய நாற்புறமும் மதில் சுவர்களுடன் விளங்குகிறது. இம்மதிலின் முகப்பில் இராஜகோபுரம் சுமார் 150 அடி உயரம் உடையதாகவும் ஏழு நிலைகளையும் ஒன்பது கலசங்களையும் கொண்டுள்ளது. இக்கோபுரத்திற்கு எதிரே நான்கு கால்களைக் கொண்ட உயர்ந்த மண்டபம் ஒன்றுள்ளது. இக்கோபுரத்திற்கு வடக்குப்பக்கம் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய தேர் மண்டபம் காணப்படுகிறது. இத்தேர் மண்டபம் கிழக்கு தெற்கு ஆகிய இரு திசைகளையும் நோக்கிய வகையில் அமைந்துள்ளது. இக்கோயில் மூன்று திருச்சுற்றுக்களைக் கொண்டுள்ளது. நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே செல்லும் போது முதலாவதாக கோயிலின் வலப்புறம் ஓர் அழகிய திருக்குளம் அமைந்துள்ளது. அதன் கரையில் நான்கு கால்களைக் கொண்ட குதிரைகள் இழுத்துச்செல்வது போன்ற கல்யாண மண்டபம் மிக அற்புதமான சிற்ப எழிலுடன் காணப்படுகிறது. இதில் மனுநீதிச் சோழன் வரலாற்றைச் சித்தரிக்கும் சிற்பங்கள் உள்ளன. இவை இரண்டிற்கும் இடையில் பலிபீடமும் கொடிமரமும் உள்ளன. இதை அடுத்து நந்தி வாகனம் கருவறையை நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு கன்னி மூலையில் விநாயகப் பெருமானும், வடமேற்கில் ஆறுமுகப்பெருமானும் உள்ளனர். மூன்றாம் திருச்சுற்றில் நந்தவனம் அமைந்துள்ளது. அடுத்து மகாமண்டபத்துடன் கூடிய ஐந்து நிலைக்கோபுரம் உள்ளது. இம்மகாமண்டபம் 36 தூண்களைக் கொண்டது. தொடர்ந்து இரண்டாம் திருச்சுற்றில் வலப்புறம் விநாயகர் சந்நிதியும் மற்றும் நவராத்திரி கொலு மண்டபமும் உள்ளன. இரண்டாம் திருச்சுற்றில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதனைக்கடந்து அர்த்த மண்டபத்தின் உள்ளே தெற்கு நோக்கியவாறிருக்கும் நடராசர் காணப்படுகின்றார். மேற்படி மண்டபத்தின் தென்பகுதியில் உலாப்படிமங்கள் உள்ளன. அடுத்து விநாயகர், நால்வர், சேக்கிழார் ஆகியோரின் திருவுருவங்களும், முதற்திருச்சுற்று நுழைவு வாயிலின் இருபுறமும் துவாரபாலகிகளின் உருவங்களும் உள்ளன. அதனை அடுத்தாற்போல் கருவறைத் திருச்சுற்று தொடர்கிறது. இக்கருவறைத் திருச்சுற்றில் விநாயகர், திருமால், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், சண்டீசுவரர் ஆகிய திருவுருவங்களைக் காணலாம். |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்து சமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருமலை பாறை ஓவியங்கள், வளத்தி சமணர் கோயில், மேல்மலையனூர் அங்காளபரமேசுவரி கோயில் |
| செல்லும் வழி | |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8:30 மணி முதல் மாலை 6:15 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 183 |
| பிடித்தவை | 0 |