Back
வழிபாட்டுத் தலம்
செஞ்சிக் கோட்டை பெருமாள் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் செஞ்சிக் கோட்டை பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் கோட்டை பெருமாள் கோயில்
ஊர் செஞ்சி
வட்டம் செஞ்சி
மாவட்டம் விழுப்புரம்
உட்பிரிவு 2
காலம் / ஆட்சியாளர் கிபி.12-ஆம் நூற்றாண்டு
சுவரோவியங்கள் இல்லை
தலத்தின் சிறப்பு 800 ஆண்டுகள் பழமையானது.
சுருக்கம்
செஞ்சிக் கோட்டையை சிறிய அளவில் கட்டியவர் ஆனந்த கோன்என்பவர் . இவர் 11 வயதிலயே மன்னராக முடிசூட்டிக் கொண்டவர். இவரைத் தொடர்ந்து இவர் பரம்பரையினர் 300 வருடமாக செஞ்சி கோட்டையை ஆண்டு வந்தனர். அனந்த கோன் ஆனந்தகிரி அல்லது ராஜகிரி கோட்டையை கட்டினார். இவரின் மகன் கிருஷ்ணகோன் மேலும் செஞ்சி கோட்டையை விரிவுப்படுத்தி மேலும் உட்புற கிருஷ்ணகிரி கோட்டை கட்டி கொத்தளங்கள் படைகளை விரிவுபடுத்தி ஆட்சி செய்தார். இக்கோட்டையை பல மன்னர்கள் கைப்பற்ற முயன்றனர் இவர்கள் வலிமை குன்றிய பொழுது இக்கோட்டையை பிற மன்னர்கள் ஆக்கிரமித்து ஆட்சி செய்தனர். இம்மன்னர்கள் காலத்தில் செஞ்சிக் கோட்டையில் பெருமாள் கோயில் கட்டப்பட்டது. இம்மன்னர்கள் வழிவழியாக வைணவத்தைப் பின்பற்றுபவர்கள் ஆவர்.
செஞ்சிக் கோட்டை பெருமாள் கோயில்
கோயிலின் அமைப்பு
பாதுகாக்கும் நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் செஞ்சிக்கோட்டை
செல்லும் வழி செஞ்சிக்கோட்டை சென்னையிலிருந்து 160 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 8:30 மணி முதல் மாலை 6:15 மணி வரை
செஞ்சிக் கோட்டை பெருமாள் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் செஞ்சி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் விழுப்புரம்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை மீனம்பாக்கம்
தங்கும் வசதி செஞ்சி வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் க.த.காந்திராஜன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 53
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்