Back
வழிபாட்டுத் தலம்
திருமணிக்குன்றப் பெருமாள் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருமணிக்குன்றப் பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் பராசர சேத்ரம், வம்புலாஞ்சோலை, அழகாபுரி, கருடாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர்
ஊர் மணிக்குன்றம்
வட்டம் திருவையாறு
மாவட்டம் தஞ்சாவூர்
உட்பிரிவு 2
மூலவர் பெயர் மணிக்குன்றப் பெருமாள்
தாயார் / அம்மன் பெயர் அம்புச வல்லி
திருக்குளம் / ஆறு ஸ்ரீராம தீர்த்தம்
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் வைகுண்ட ஏகாதசி, இராமநவமி
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறையில் மணிக்குன்றப் பெருமாள் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் உள்ளார்.
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
சுருக்கம்
பெருமாள் இங்கு எழுந்தருளியதும் குபேரன் விஸ்வகர்மாவை (தேவசிற்பி) அழைத்து இங்கு ஒரு நகரை நிர்மானம் பண்ணச்சொல்ல கருடன் பறப்பதுபோல் அவர் இந்நகரத்தைச் சிருஷ்டித்தார். இந்நகரில் கருடனின் சக்தி இருப்பதாகவும், கருடன் பறந்து இந்நகரத்தை காப்பதாகவும் ஐதீகம். எனவேகருடன் பறப்பதால் இந்நகரில் பாம்பு கடிக்காது என்பதும் பழமொழி. ஸ்ரீநீலமேகன், ஸ்ரீமணிக்குன்னன், ஸ்ரீவீரசிங்கப்பெருமாள் இம்மூவரும் முறையே ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவியின் மயக்கிற்பட்டு இவ்விடத்திலிருந்து பக்தர்கட்கு அருளுவதாகவும் மரபு. “வெட்டுங்கலியன் வேல் வலியால் மந்திரத்தைத் தட்டிப் பறித்த மணங்கொல்லை” என்று திருமங்கை ஆழ்வார் பகவானிடம் மந்திரத்தை தட்டிப்பறித்த வெண்ணாற்றங் கரையில் தான் இத்தலம் அமைந்துள்ளது. இது ஒரு கோடியிலும் அது ஒரு கோடியிலும் உள்ளது. இங்கு விண்ணாறு எனப்படுகிறது. அங்கு(நதி துவங்குமிடத்து) வெண்ணாறு எனப்படுகிறது.
திருமணிக்குன்றப் பெருமாள் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் குன்று போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. மணிக்கூட விமானம் என்ற கட்டடக்கலை வடிவமைப்பு இக்கோயில் கருவறை விமானம் அமைந்துள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருக்கண்டியூர், திருவேள்விக்குடி, திருச்சோற்றுத்துறை, ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில்
செல்லும் வழி இத்தலம் தஞ்சை நகரைத் தாண்டியதும் அமைந்துள்ள வெண்ணாற்றங்கரை மீது அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
திருமணிக்குன்றப் பெருமாள் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் மணிக்குன்றம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருவையாறு
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி தஞ்சாவூர் நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    4 Files

  • TVA_TEM_000210/TVA_TEM_000210_ம...

  • TVA_TEM_000210/TVA_TEM_000210_ம...

  • TVA_TEM_000210/TVA_TEM_000210_ம...

  • TVA_TEM_000210/TVA_TEM_000210_ம...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Nov 2018
பார்வைகள் 72
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்