வழிபாட்டுத் தலம்

சப்தபுரீஸ்வரர் திருக்கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் | சப்தபுரீஸ்வரர் திருக்கோயில் |
---|---|
வேறு பெயர்கள் | திருத்தாளமுடையார் கோயில், தாளபுரீசுவரர் கோயில், தாளேஸ்வரர் கோயில் |
ஊர் | திருக்கோலக்கா |
வட்டம் | சீர்காழி |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
தொலைபேசி | 04364 - 274 175 |
உட்பிரிவு | 1 |
மூலவர் பெயர் | சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர், திருத்தாளமுடையார் |
தாயார் / அம்மன் பெயர் | தொனிப்ரதாம்பாள், ஓசை கொடுத்த நாயகி |
தலமரம் | கொன்றை |
திருக்குளம் / ஆறு | ஆனந்த தீர்த்தம் |
வழிபாடு | காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் |
திருவிழாக்கள் | சீர்காழியில் திருமுலைப்பால் உற்சவம் நடைபெறும்போது இங்குத் தாளம் வழங்கும் ஐதீகவிழா நடைபெறுகிறது. கார்த்திகைச் சோமவாரங்கள், நவராத்திரி, சஷ்டி, சிவராத்திரி, பிரதோஷ காலங்கள் முதலிய சிறப்பு விழாக்கள் நடைபெறுகின்றன. |
காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு / சோழர்கள் |
சுவரோவியங்கள் | இல்லை |
சிற்பங்கள் | கருவறையில் மூலவர் இலிங்கத் திருமேனி. அம்பாள் நின்ற திருமேனி. ஞானசம்பந்தர் பொன் தாளத்தை இரு கைகளிலும் ஏந்தி நிற்கும் உற்சவத் திருமேனி தரிசிக்கத்தக்கது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சனிபகவான், பைரவர், சூரியன், நால்வர், அதிகார நந்தி உள்ளன. உள்மண்டபத்தில் வலப்பால் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. |
தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். |
சுருக்கம்
சீர்காழிக்குப் பக்கத்தில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. பெரிய கோயில். திருத்தாளமுடையார் கோயில் என்றழைக்கப்படுகிறது. ஞானசம்பந்தரின் யாத்திரையில் இதுவே முதல்தலம். கைகொட்டிப் பாடிய ஞானசம்பந்தருக்கு இறைவன், திருவைந்தெழுத்து பொறித்த தாளத்தையருள, அதற்குத் தெய்விகஓசையை இறைவி தந்து அருள்செய்த தலம்.
|
சப்தபுரீஸ்வரர் திருக்கோயில்
கோயிலின் அமைப்பு | கோயில் புதுப் பொலிவுடன் திகழ்கிறது. எதிரில் திருக்குளம் - ஆனந்ததீர்த்தம். முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுதையில் ரிஷபாரூடர் தரிசனம் - உள்நுழைந்ததும் வலப்பால் வாகன மண்டபம். நுழையும்போது நால்வர்அதிகார நந்தி சந்நிதிகள் உள. பிராகாரத்தில் விநாயகர்சோமாஸ்கந்தர்சுப்பிரமணியர்மகாலட்சுமிசனிபகவான்பைரவர்சூரியன் சந்நிதிகள் உள்ளன.உள்மண்டபத்தில் வலப்பால் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராச சபை உள்ளது. |
---|---|
பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | தோணியப்பர் கோயில், திரிவிக்கிரமப் பெருமாள் கோயில், திருஞானசம்பந்தர் அவதார இல்லம் |
செல்லும் வழி | சீர்காழிக்குப் பக்கத்தில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. |
கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 வரை |
வழிபாட்டுத் தலம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 23 Nov 2018 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |