Back
வழிபாட்டுத் தலம்
திருக்கள்வனூர் ஆதிவராகப்பெருமாள் கோவில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருக்கள்வனூர் ஆதிவராகப்பெருமாள் கோவில்
வேறு பெயர்கள் திருக்கள்வனூர்
ஊர் பெரிய காஞ்சி
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
உட்பிரிவு 2
மூலவர் பெயர் ஆதிவராஹப் பெருமாள்
தாயார் / அம்மன் பெயர் அஞ்சிலை வல்லி நாச்சியார்
திருக்குளம் / ஆறு நித்ய புஷ்கரணி
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் இல்லை
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு/ பல்லவ, பாண்டிய சோழப் பேரரசுகள் மற்றும் விசயநகர நாயக்கர்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் காமாட்சியம்மன் கர்ப்பக் கிரஹத்திற்கு முன் ஒரு மூலையில் (ஒரு கம்பத்தில் உள்ள சிலை போல்) கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில் நால்தோள் எந்தாயாக எழுந்தருளியிருக்கிறார்.
தலத்தின் சிறப்பு 108- திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வாரால் மட்டும் மங்களாசாசனம் பாடப்பெற்ற திருத்தலம்.
சுருக்கம்
மிகச் சிறிய வடிவிலான மூர்த்தியாக 108 திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருப்பது இங்கு மட்டும்தான். காமாட்சியம்மன் திருக்குளத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள நின்றான். இருந்தான். கிடந்தான் என்ற மூன்று திருக்கோலத்தைக் காட்டி மூன்றடுக்கில் எழுந்தருளியுள்ள எம்பெருமான்களை உற்று நோக்கினால் அவைகள் பல்லவர்கள் காலத்தில்படைக்கப்பட்ட கலைப் படைப்புக்களைப் போலன்றி வேறெங்கோ இருந்து பெயர்த்தெடுத்து இவ்விடம் கொணர்ந்து வைத்ததைப் போல் உள்ளது. இத்தலம் ஆய்விற்குரியது. பல அழகு தமிழ்ப் பெயர்கள் பூண்டுள்ள நாச்சியார்களைப் போல இந்த பிராட்டிக்கும் அஞ்சிலைவல்லி நாச்சியார் என்றும் அழகுத் திருநாமம். திருமங்கையாழ்வாரால் மட்டும் மங்களாசாசனம். தனியாக சன்னதி. உற்சவர் போன்றவர்கள் இல்லாததனால் உற்சவங்களும், விழாக்களும் இல்லை. நித்தியபடி பூஜையும் காமாட்சியம்மன் கோவில் அர்ச்சகர்களாலேயே செய்யப்படுகிறது. காஞ்சியில் பற்பல திவ்ய தேசங்களில் மிகமிகப் பெரிய கோவில்களில் எழுந்தருளியிருந்து அங்குவரும் பக்தர்கட்கு அருள் பாலித்து திருப்தி அடையாமல் காமாட்சியம்மன் கோவிலின் ஒரு மூலையின் நின்றுகொண்டு இங்கு வரும் பக்தர்களையும் தன் அருளுக்கு இலக்காக்க வேண்டுமென்று இப்படிக் கள்ளத் தனமாக உறைவதால் கள்வன் எனப்பட்டான் போலும் என்று ஒரு நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பதும் ஈண்டு ஆழ்பொருள் சிந்தனைக்கு வித்திடுவதாகும். அஷ்ட பிரபந்தம் என்னும் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் அழகிய மணவாள தாசரான பிள்ளைப் பெருமாளையங்கார் கச்சிக் கள்வா நான் பெரிய கள்ளன், உனக்கு சொந்தமான இந்த ஆத்மாவை எனக்கே உரிமையாகச் செய்து கொண்டே வாழ்ந்து வருகிறேன். இது ஆத்மபகாரம் இதைக் காட்டிலும் பெருங்களவு வேறில்லை. அப்படிப்பட்ட என்னைக் கள்வன் என்று கூறாமல் மங்காத பண்புக் கடலாகிய உன்னைக் கள்வன் என்கிறார்களே இதுதான் விந்தை என்கிறார். பண்டேயுன் தொண்டாம் பழவுயிரை யென்னதென்று கொண்டேனைக் கள்வனென்று கூறாதே – மண்டலத்தோர் புள்வாய் பிளந்த புயலே உனைக் கச்சிக் கள்வா வென் றோதுவதென் கண்டு.
திருக்கள்வனூர் ஆதிவராகப்பெருமாள் கோவில்
கோயிலின் அமைப்பு காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலின் உள்ளே இத்தலம் அமைந்துள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் வரதராஜப்பெருமாள் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில்
செல்லும் வழி பெரிய காஞ்சி என அழைக்கப்படும் பகுதியில் காமாட்சியம்மன் கோவிலுக்குள்ளேயே இத்தலம் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 5.00 -12.30 முதல் மாலை 3.30-9.30 வரை
திருக்கள்வனூர் ஆதிவராகப்பெருமாள் கோவில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் காஞ்சிபுரம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி காஞ்சிபுரம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 20 Jul 2017
பார்வைகள் 29
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்