வழிபாட்டுத் தலம்
மணிமங்கலம் தருமேசுவரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | மணிமங்கலம் தருமேசுவரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | வேதமங்கலம் |
| ஊர் | மணிமங்கலம் |
| வட்டம் | தாம்பரம் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| தொலைபேசி | +91- 44 – 2717 8157, 98400 24594 |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | தர்மேஸ்வரர் |
| தாயார் / அம்மன் பெயர் | வேதாம்பிகை |
| தலமரம் | சரக்கொன்றை |
| திருக்குளம் / ஆறு | சிவபுஷ்கரிணி |
| ஆகமம் | சிவாகமம் |
| திருவிழாக்கள் | ஆடிப்பூரம், நவராத்திரி, சிவராத்திரி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு / முதலாம் நரசிம்மவர்மப் பல்லவன் |
| கல்வெட்டு / செப்பேடு | கண்டகோபாலன் மதுராந்தக பொத்தப்பி சோழன் மணிமங்கலத்து வாரியனும் கரணத்தானும் தன்னை நேரில் கண்டு தங்களூரில் பல கோவில் தெய்வங்களுக்கு பன்னிரண்டு வேலி நிலங்கள் உள்ளன என்றனர். அதோடு தை மாதம் இரண்டாம் நாள் முதல் பொன்வரி, ஆயம், பட்டி குற்றம் என இப்படி உள்ள எல்லா வரிகளும் தமக்கு கீழ்ப்படிந்த ( மகனார் > மூன்றாம் அதிகார நிலை அரையர்) நீலகங்கரையர் தம்முடைய ஊரான மணிமங்கலத்தின் திருப்பணிக்கு கொடுத்தோம். ஓலை ஆணை இட்ட இந்நாள் முதலே ஊருடன் இணைந்து போவதாகச் சொல்லினோம். இப்படி செய்யவேண்டும் என்று ஆணையிட்டு கண்டகோபாலன் எழுதியது. இரண்டாம் நிலை அதிகார கண்டகோபால மன்னனிடம் வரிச்சலுகைக் காண ஆணை பெற்றதும் அந்த ஆணைக்கு துணை ஆணையாக மூன்றாம் அதிகார நிலை அரையனான நீலகங்கரையன் ஒரு ஆணை வெளியிடுகிறான். மணிமங்கலம் நீலகங்கரையனின் ஊர் ஆகும். இவ்விரண்டு கல்வெட்டுகளும் ஒரே சிற்பியால் வெட்டப்பட்டுள்ளன என்பதோடு இரண்டின் வாக்கிய அமைப்பும் ஒன்றாகவே உள்ளன. மதுராந்தக பொத்தப்பி சோழன் மூன்றாம் இராசராச சோழனுக்கு அடங்கி அவனது ஆட்சிக்கு காலத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இரண்டிற்கும் தை -ஆனி மாத இடைவெளி உள்ளதாகத் தெரிகிறது. இக்கல்வெட்டில் மண்டலம், கோட்டம், நாடு குறிக்கப்படவில்லை. மணிமங்கலத்து ஈசன் கோவிலில் கைக்கோளரும் (செங்குந்தர் படையும்) அதன் தலைவரும் கூடியிருக்கின்றனர் மன்னன் ஸ்ரீரங்கநாத யாதவராயன் பிறந்த நாளில் முன்னைய ஆண்டு நோய் அல்லது நிலை ஒழிந்து புதுமையான தோற்றத்தோடு இவ்வாண்டு அவன் இங்கு வந்து ஆணை இட்டபடி திருப்பணி நடைபெற நாரணித்தண்டில் இருநூறு குழி நிலம் தானம் செய்கிறான். இவனது 17 ஆட்சி ஆண்டில் (1353 A D) இக்கல்வெட்டு வெட்டப்பட்டது. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | சிவன் சன்னதி, அம்பாள் சன்னதிகள் தனித்தனி கோயில் போன்ற அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. சதுர்வேத விநாயகர் , பைரவர், சனீஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் முருகன், அனுக்கை விநாயகர், சுந்தரர், நாவுக்கரசர் மற்றும் நவக்கிரகங்கள் ஆகியோர் உள்ளனர். |
| தலத்தின் சிறப்பு | 500 ஆண்டுகள் பழமையானது. தெலுங்கு யாதவராயர் காலத்தியது. |
|
சுருக்கம்
மணிமங்கலம் தருமேசுவரர் கோயில் தருமேசுவரர் கோயில் பழமையானது. மணிமங்கலம் நரசிம்ம வர்மப் பல்லவனுக்கும் மேலைச் சாளுக்கியன் இரண்டாம் புலிகேசிக்கும் முதல் போர் நடந்த இடம். இப்போரில் பல்லவ மன்னன் வென்றான்.
|
|
மணிமங்கலம் தருமேசுவரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் கோயில், கச்சி அனேகதங்காவதேசுவரர் கோயில், ஓணகாந்தன்தளி |
| செல்லும் வழி | மணிமங்கலம் தாம்பரத்தில் இருந்து 15 கி.மி. தொலைவில் உள்ளது |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Mar 2019 |
| பார்வைகள் | 65 |
| பிடித்தவை | 0 |