வழிபாட்டுத் தலம்
திருப்புளிங்குடி காய்சினவேந்தப் பெருமாள்கோவில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருப்புளிங்குடி காய்சினவேந்தப் பெருமாள்கோவில் |
|---|---|
| வேறு பெயர்கள் | காய்சினவேந்தப் பெருமாள்கோவில் |
| ஊர் | திருப்புளிங்குடி |
| வட்டம் | திருச்செந்தூர் |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | காய்சின வேந்தர் (காசினி வேந்தர்) |
| தாயார் / அம்மன் பெயர் | மலர்மகள் நாச்சியார், பூமிப்பிராட்டி, புளிங்குடிவல்லி |
| திருக்குளம் / ஆறு | இந்திர தீர்த்தம், நிருதி தீர்த்தம் |
| வழிபாடு | ஆறுகால பூசை |
| திருவிழாக்கள் | திருப்புளிங்குடி காய்சினவேந்த பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி திருவீதி உலா வருவார். ஐந்தாம் நாளில் கருடசேவையும், வாகன புறப்பாடும் உண்டு. 9–ம் நாள் திருவிழா அன்று காலை 8 மணிக்கு பல்லக்கில் சுவாமி மாடவீதி புறப்பாடும், 10 மணிக்கு சன்னியில் இருந்து தோளுக்கினியான் வாகனத்தில் தெப்ப மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கும். |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு/ பாண்டிய, சோழப் பேரரசுகள் மற்றும் விசயநகர நாயக்கர் |
| சிற்பங்கள் | இங்குள்ள இலக்குமி தேவி, பூமிப்பிராட்டி, நாச்சியார்களின் திருவுருவங்கள் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மிகமிகப் பெரியவைகள். புளிங்குடிவல்லியென்ற சிறிய உற்சவப் பிராட்டியுமுண்டு. புஜங்கசயனம் கிழக்கு நோக்கிய திருக்கோலம். |
| தலத்தின் சிறப்பு | 108- திவ்ய தேசங்களில் ஒன்று. நம்மாழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலம். |
|
சுருக்கம்
இங்குள்ள இலக்குமி தேவி, பூமிப்பிராட்டி, நாச்சியார்களின் திருவுருவங்கள் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மிகமிகப் பெரியவைகள். பெருமாளின் திருவயிற்றிலிருந்து செல்லும் தாமரைக் கொடி, சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது போன்ற அரிய காட்சியும், இங்கு தவிர வேறெங்கும் காண்டற்கரிது. (பிற இடங்களில் அல்லது பொதுவாக திருமாலின் நாபிக் கமலத்திலிருந்துசெல்லும் தாமரைத் தண்டின் மலரில்தான் பிரம்மா அமர்ந்திருப்பது வழக்கம்) நவக்கிரகங்களில் வியாழனொடு சம்பந்தப்பட்ட ஸ்தலம் சயன திருக்கோலத்தில் உள்ள திருமாலின் ஒரு பாதத்தை மூலஸ்தானத்தைச் சுற்றி வருகையில் சுவற்றின் வெளிப்புறமுள்ள ஒரு ஜன்னலின் வழியாகச் சேவிப்பதற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ள இக்கட்டிட அமைப்பு பிறஸ்தலங்களில் அமையப் பெறாத ஒன்றாகும். நம்மாழ்வாரின் பாசுரத்தைக் கூர்ந்து நோக்கினால் மேற்சொன்ன வரலாறு அனைத்தும் அதில் பொதிந்துள்ள நிலையைக் கண்ணுறலாம். நம்மாழ்வாரால் மட்டும் 12 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசமாகிறது. இராமானுஜர் இவ்வூருக்கு வந்து திருப்புளிங்குடி எம்பெருமானைச் சேவித்துவிட்டு வரும்போது, கோவிலின் வெளிப் பிரகாரத்தில் நெல்லிவாட்டிய (நெல்லைக் காயலிட்டுக் கொண்டு இருந்த) அக்கோவிலின் அர்ச்சகர் மகளைக்கண்டு குருகூர் இன்னும் எவ்வளவு தூரமென்றார். அது இன்னும் கூப்பிடு தொலைவில் உள்ளதென்பதை “முக்கோலேந்தி துவராடையணிந்த மூதறிவாளா கூவுதல் வருதல் செய்திடாயென்று குரைகடல் வண்ணன் தன்னை மேவி நன்கமர்ந்தவியன் புனல் பொருநல் வழுதிநாடன் சடகோபன்” என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தினாலேயே மறைமுகமாய் சுட்டிக்காட்டினாள். ஆழ்வாரின் பாசுரத்தைச் செவியில் கேட்ட மாத்திரத்தில், ஆழ்வார் மீதுள்ள பேரன்பால் (யாமும் கூப்பிடு தொலை எய்திவிட்டோமோ என்றெண்ணி) அப்படியே தரையில் வீழ்ந்து அப்பெண்ணை வணங்கினார். (இதைக்கண்ட அர்ச்சகர் தமது மகளை இராமானுஜரின் பாதத்தில் விழச் செய்து மன்னிப்பும் கோரினார்)
|
|
திருப்புளிங்குடி காய்சினவேந்தப் பெருமாள்கோவில்
| கோயிலின் அமைப்பு | சயனத் திருக்கோலத்தில் உள்ள திருமாலின் ஒரு பாதத்தை மூலஸ்தானத்தைச் சுற்றி வருகையில் சுவற்றின் வெளிப்புறமுள்ள ஒரு ஜன்னலின் வழியாகச் சேவிப்பதற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ள இக்கட்டிட அமைப்பு பிறஸ்தலங்களில் அமையப் பெறாத ஒன்றாகும். |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருச்செந்தூர், வரகுணமங்கை |
| செல்லும் வழி | ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில், ஸ்ரீ வரகுணமங்கையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்புளிங்குடி காசினிவேந்தன் திருக்கோவில். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 -12.00 முதல் மாலை 1.00-6.00 வரை |
திருப்புளிங்குடி காய்சினவேந்தப் பெருமாள்கோவில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | திருப்புளிங்குடி, வரகுணமங்கை |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | திருச்செந்தூர் |
| அருகிலுள்ள விமான நிலையம் | மதுரை |
| தங்கும் வசதி | திருச்செந்தூர் விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 21 Sep 2017 |
| பார்வைகள் | 307 |
| பிடித்தவை | 0 |