வழிபாட்டுத் தலம்
கரந்தை குந்துநாதர் ஜினாலயம்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | கரந்தை குந்துநாதர் ஜினாலயம் |
|---|---|
| வேறு பெயர்கள் | குந்துநாதர் ஜினாலயம் |
| ஊர் | கரந்தை |
| வட்டம் | வெம்பாக்கம் |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| உட்பிரிவு | 6 |
| மூலவர் பெயர் | குந்துநாதர் |
| தாயார் / அம்மன் பெயர் | தர்மதேவி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு / பல்லவர் |
| கல்வெட்டு / செப்பேடு | பல்வேறு காலகட்டங்களில் சோழர், விஜயநகர மன்னர், சிற்றரசர்கள் ஆகியோர் இக்கோயிலை ஆதரித்துள்ளனர் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. வீரஇராஜேந்திர சோழன் திருப்பணிகள் செய்ததால் இக்கோயில் வீரஇராஜேந்திர பெரும்பள்ளி எனப்பட்டது. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கோயிலின் மூலவர் 17- வது தீர்த்தங்கரரான பகவான் குந்துநாதர் சுதை வடிவில் காட்சி தருகிறார். கருவறையின் பின்புறம் புடைப்புச் சிற்பமாக பகவான் பார்சுவநாதர் மேற்கு திசை நோக்கி திருநறுங்கொண்டையெனும் இடத்தில் இருப்பதுபோல் இருப்பதால் மேற்றிசைப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். சோழர்காலக் கல்வெட்டும் இப்பெயரையே சுட்டுகிறது. இத்தலத்தில் பாகுபலி, சிலையாக மிகக் கலை நயத்தோடு, நேர்த்தியோடு காட்சித் தருகிறார். உயரமான கருவறையில் சுதை வடிவிலுள்ள மகாவீரர் திருக்காட்டாம்பள்ளி ஆழ்வார் எனப்படுகிறார். பார்சுவநாதர் முன் சீதளன் புடைப்பு சிற்பமும் கருவறை எதிரே சுவற்றில் காணப்படுகிறார். |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. முற்காலப் பல்லவர் காலத்தியக் கோயில். |
|
சுருக்கம்
சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னரால் கட்டப்பட்ட சமணர் கோயில் கரந்தையில் உள்ளது. இக்கோயில் நெடிதுயர்ந்த மதிலால் சூழப்பட்டுள்ளது. குந்துநாதர் சமண சமயத்தின் 17வது தீர்த்தங்கரர் ஆவார். கருமத் தளைகளிலிருந்து விடுபட்ட குந்துநாதர் சித்த புருசராக விளங்கியவர். குந்துநாதர், இச்வாகு குல மன்னர் சூரியதேவருக்கும் - இராணி ஸ்ரீதேவிக்கும், அஸ்தினாபுரத்தில் பிறந்தவர். குந்து என்பதற்கு வட மொழியில் நவரத்தினங்களின் குவியல் எனப் பொருளாகும். குந்துநாதர் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார். இங்குள்ள தர்மதேவி மிக மூர்த்திகரமானதென்று நம்புகின்றனர். அகளங்கர் எனும் பெரும் புகழ் வாய்ந்த மாமுனிவர் தருமதேவி ஆசியுடன் அரசன் சீதளன் காலத்தில் பௌத்தரை சமயவாதம் செய்து வென்றுள்ளார்.
|
|
கரந்தை குந்துநாதர் ஜினாலயம்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | கூழம்பந்தல் கங்கை கொண்ட சோழீஸ்வரம், உக்கல் சிவன் கோயில், மேல்சித்தாமூர் சமணர் கோயில், புலிவலம் சிவன் கோயில், உத்திரமேரூர், மாமண்டூர் குடைவரைகள் |
| செல்லும் வழி | காஞ்சிபுரத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் இரட்டைக் கிராமங்களான கரந்தை, திருப்பணமூர் எனும் சமண கிராமங்களுள்ளன. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 மணி முதல் இரவு 5.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Mar 2019 |
| பார்வைகள் | 318 |
| பிடித்தவை | 0 |