வழிபாட்டுத் தலம்
திருக்கவித்தலம் கஜேந்திரவரதர் திருக்கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருக்கவித்தலம் கஜேந்திரவரதர் திருக்கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | திருக்கவித்தலம் (கபிஸ்தலம், கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரம்) |
| ஊர் | கபிஸ்தலம் |
| வட்டம் | பாபநாசம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | கஜேந்திர வரதன் |
| தாயார் / அம்மன் பெயர் | ரமாமணவல்லி (பொற்றாமரையாள்) |
| தலமரம் | மகிழம்பூ மரம் |
| திருக்குளம் / ஆறு | கஜேந்திர புஷ்கரணி, கபில தீர்த்தம் |
| ஆகமம் | வைகானச ஆகமம் |
| வழிபாடு | ஆறுகால பூசை |
| திருவிழாக்கள் | ஆடி பௌர்ணமியன்று நடைபெறும் கஜேந்திர மோட்ச லீலை, வைகாசி விசாகத் தேர்த் திருவிழா, பிரம்மோற்சவம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு/ பாண்டிய, சோழப் பேரரசுகள் மற்றும் விசயநகர நாயக்கர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கஜேந்திரவரதன் கிழக்கு நோக்கி புஜங்கசயனம் என்கின்ற அரவணையில் சயனித்த திருக்கோலம். உற்சவர் படிமங்கள் நின்ற கோலத்தில் திருமகள், பூமகள் உடன் செப்புத் திருமேனிகளாக அமைந்துள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 108- திவ்ய தேசங்களில் ஒன்று. திருமழிசையாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் மங்களாசாசனம் |
|
சுருக்கம்
மகாபாரதத்தினும் காலத்தால் முந்திய திருமழிசையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும் இதன் தொன்மைக்குச் சான்று. ‘கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகையறிந்தேன் ஆற்றங் கரை கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும் மாயன் உரைகிடக்கும் உள்ளத் தெனக்கு’ என்பது திருமழிசையாழ்வாரின் பாடல். இப்பாவினில் வரும் ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் என்ற பெயரே பெருமானுக்கு வழங்கி வருகிறது. 108 திவ்ய தேசங்களில் இரண்டு விலங்கினங்களுக்கு காட்சி கொடுத்தது இந்த ஒரு ஸ்தலத்தில்தான். “விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய் வெள்ளெயிறுறவதன் விடத்தினுக் கணுங்கி அழுங்கிய ஆனையின ருந்துயர் கெடுத்த...” என்று யானைக்கு பெருமாள் அருளிய நிகழ்ச்சியை தொண்டரடிப் பொடியாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
|
|
திருக்கவித்தலம் கஜேந்திரவரதர் திருக்கோயில்
| கோயிலின் அமைப்பு | பரந்த வளாகத்தில் அமைந்துள்ள இக்கோவில், 5 அடுக்கு இராஜகோபுரம் கொண்டுள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | புள்ளமங்கை பசுபதி நாதர் கோயில், ஆலந்துறை மகாதேவர் கோயில்ஷ |
| செல்லும் வழி | தஞ்சையிலிருந்து திருவையாறு வழியாக கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ளது. இவ்வழியில் நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன. பாபநாசம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 மைல் தூரத்தில் உள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.00 -12.00 முதல் மாலை 5.00-7.00 வரை |
திருக்கவித்தலம் கஜேந்திரவரதர் திருக்கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | கபிஸ்தலம், பாபநாசம் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | தஞ்சாவூர் |
| அருகிலுள்ள விமான நிலையம் | திருச்சி |
| தங்கும் வசதி | தஞ்சாவூர் விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 21 Sep 2017 |
| பார்வைகள் | 92 |
| பிடித்தவை | 0 |