வழிபாட்டுத் தலம்
மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | மண்டகப்பட்டு குடைவரைக் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | இலக்ஷிதாயனம் |
| ஊர் | மண்டகப்பட்டு |
| வட்டம் | செஞ்சி |
| மாவட்டம் | விழுப்புரம் |
| உட்பிரிவு | 8 |
| மூலவர் பெயர் | பிரம்மன், விஷ்ணு, சிவன் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு/ முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன் |
| கல்வெட்டு / செப்பேடு | இக்குடைவரைக் கோயிலில் உள்ள மகேந்திரவர்மனின் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பல்லவ கிரந்த எழுத்தில் உள்ள சமஸ்கிருத கல்வெட்டு, இந்தக் கோயிலை செங்கல், மரம், உலோகம், சுதை இன்றி நான்முகன், திருமால், சிவபெருமான் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் விசித்திர சித்தனாகிய நான் தோற்றுவித்தேன் என்று மகேந்திரவர்மன் கூறுவதாக குறிப்பிடுகிறது. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | மும்மூர்த்திகளின் குடைவரைக் கோயிலின் வாயிலின் இருபுறமும் இரு வாயிற்காவலர்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. |
| தலத்தின் சிறப்பு | 1400 ஆண்டுகள் பழமையானது. பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனனால் கட்டப்பட்ட தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயிலாகும். |
|
சுருக்கம்
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ளகுடைவரைக் கோயில் என இங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. இக்குடைவரை கோயில் தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயிலாகும். கி.பி 590 முதல் கி.பி 630 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது. இக்கோயில். தமிழகக் கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகின்றது. மிகவும் எளிய, எழில் வாய்ந்த குடைவரைக் கோயிலாக இக்கோயில் விளங்குகிறது.
|
|
மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்குடைவரைக் கோயில் மூன்று கருவறைகளை உடையதாக இருக்கிறது. அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகியவற்றை கொண்டள்ளது. அர்த்தமண்டபத்தில் இரண்டு அரைத்தூண்களும், இரண்டு முழுத்தூண்களும் உள்ளன. இரண்டு முழுத்தூண்களும் தரையில் இருந்து சதுரம், கட்டு, சதுரம் என உள்ளது. அவ்வாறே முகமண்டபமும் அமைக்கப்பட்டள்ளது. முகப்பின் இருபுறமும் அமைந்து உட்குழிவு வளைவில் இருபுறமும் வாயிற்காவலர்கள் நிற்கின்றனர். மேற்குப்புறத்தில் உள்ள அரைத்தூணில் பல்லவ கிரந்தத்தில் வடமொழி கல்வெட்டில் இக்குடைவரை லக்ஷிதாயனம் என பெயரிடப்பட்டுள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | தளவானூர் குடைவரைக் கோயில், செஞ்சிக் கோட்டை |
| செல்லும் வழி | மண்டகப்பட்டு குடைவரைக் கோயில் விழுப்புரம் செஞ்சி சாலையில், விழுப்புரத்திலிருந்து இருபதாவது கிலோமீட்டரில் வலப்புறம் பிரியும் மண்சாலை வழியே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. விழுப்புரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், செஞ்சியிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 44 |
| பிடித்தவை | 0 |