Back
வழிபாட்டுத் தலம்
அருள்மிகு அக்னீஸ்வரஸ்வாமி கோவில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அருள்மிகு அக்னீஸ்வரஸ்வாமி கோவில்
வேறு பெயர்கள் புன்னாகவனம், சரண்யபுரம், ரக்தாரண்யம்
ஊர் திருப்புகலூர்
வட்டம் நாகப்பட்டினம்
மாவட்டம் நாகப்பட்டினம்
தொலைபேசி 04366-237198, 273176
உட்பிரிவு 1
மூலவர் பெயர் அக்னிபுரீஸ்வரர், சரண்யபுரீசுவரர், கோணப்பிரான்
தாயார் / அம்மன் பெயர் சூளிகாம்பாள், கருந்தார்குழலி
தலமரம் புன்னை
திருக்குளம் / ஆறு அக்கினி தீர்த்தம்
திருவிழாக்கள் வைகாசி பூர்ணிமா, வைகாசி பிரம்மோற்சவம், சித்திரை சதயம் அப்பர் திருவிழா
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-10 ஆம் நூற்றாண்டு/ முற்காலச் சோழர்கள்
கல்வெட்டு / செப்பேடு இத்தலத்துக் கல்வெட்டு ஒன்று திருநாவுக்கரசரை “குளிச்செழுந்த நாயனார்” என்றும் ; முருகநாயனார் மடத்தை “நம்பி நாயனார் திருமடம்” என்றும் ; திருநீலகண்டயாழ்ப்பாணரை “யாழ்முரி நாயனார், தருமபுரத்து நாயனார்” என்றும் குறிப்பது, உணர்ந்து இன்புறத்தக்க செய்தியாகும்.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் மூலவர் - வாணாசூரன் (பெயர்த்தெடுக்கமுயன்றதால்) கோணப்பிரான் என்னும் பெயருக்கேற்பச் சற்று வடக்காகச் சாய்ந்துள்ளது. குவளை சார்த்தப்பட்டுள்ளது. மூலவருக்குப் பக்கத்தில் சந்திரசேகரர் தனிச்சந்நிதி உள்ளது. இங்கு இவரே பிரதானமாவார். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், நடராசர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை, பிட்சாடனர் ஆலிங்கனகல்யாண சுந்தரர் முதலிய மூர்த்தங்கள் உள்ளன. நடராசசபை அழகாகவுள்ளது. உற்சவ மூர்த்தங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 1) அக்கினி (2 முகம் 7 கரங்கள 3 திருவடி 4 கொம்புகள் 7 ஜ்வாலைகளுடன் கூடிய உருவம்) 2) முகாசூரசம்ஹார மூர்த்தி, 3) சோமாஸ்கந்தர் முதலியவை மிகச்சிறப்பானவை.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. தேவார மூவர் பாடல் பெற்ற தலம்.
சுருக்கம்
நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம். சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. அதனுள் சென்றால் கோயிலையடையலாம். கோயிலின் முன்னால் வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளது. எதிரில் சிவாகம தேவார பாடசாலை உள்ளது. இத்திருக்கோயில் வேளாக்குறிச்சி ஆதீனத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. உயிர்கள் இறைவன் திருவடிகளைப் புகலாக அடைந்த ஊர். எனவே திருப்புகலூர் என்று பெயர் பெற்றிருக்கலாம் என்பர். இத்தலத்திற்குப் புன்னாகவனம், சரண்யபுரம், ரக்தாரண்யம் என்பன வேறு பெயர்கள். திருநாவுக்கரசு நாயனார் சித்திரைச் சதய நாளில் இறைவனடி சேர்ந்த பெருமையுடைய தலம். முருகநாயனார் அவதாரத் தலம். சுந்தரருக்கு இறைவன் செங்கற்களைப் பொன்னாக மாற்றித் தந்தருளிய தலம். அக்கினி, பாரத்வாஜர் முதலியோர் வழிபட்டது. இத்தலத்திருந்த முருகநாயனார் திருமடத்தில் சம்பந்தர், அப்பர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலியோர் கூடியிருந்து மகிழ்ந்த செய்தி பெரிய புராணத்தில் வருகின்றது. இத்திருமடம் தற்போது ஆதீனமுள்ள இடமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அருள்மிகு அக்னீஸ்வரஸ்வாமி கோவில்
கோயிலின் அமைப்பு சுற்றிலும் அகழியால் சூழப்பட்ட பெரிய கோயில். பாணாசூரன் தோண்டிய அகழியே நாற்புறமும் தீர்த்தமாக உள்ளது. கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். ஐந்து நிலைகளையுடையது. உள்கோபுரம் மூன்று நிலைகள். உள்ளே நுழைந்ததும் பிரதான விநாயகர். உள்ளே வலப்பால் அம்பாள் சந்நிதி - தெற்கு நோக்கி. வெளிப்பிராகாரத்தில் சிந்தாமணியீஸ்வரர், நர்த்தன விநாயகர், பாரத்வாசர் வழிபட்ட லிங்கம், அப்பர் ஐக்கிய சிற்பம் முதலிய சந்நிதிகள் உள. உள் பிரகாரத்தில் அக்கினி, அறுபத்துமூவர், பஞ்சலிங்கங்கள், அப்பர் சந்நிதி, வாதாபி விநாயகர், சுப்பிரமணியர், மகரிஷிகள் வழிபட்ட லிங்கங்கள், மகாலட்சுமி, சனீஸ்வரன், நளன், நவக்கிரகம், கலைமகள், அன்னபூரணி, காலசம்ஹாரர் முதலிய சந்நிதிகள் உள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் வேளாக்குறிச்சி ஆதீனத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்டது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுவரர் கோயில், கீழையூர் கடைமுடிநாதர் கோயில்
செல்லும் வழி நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம். நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் திருப்புகலூர் தலம் இருக்கிறது. சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. அதனுள் சென்றால் கோயிலையடையலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 -12.00 முதல் மாலை 5.00-8.00 வரை
அருள்மிகு அக்னீஸ்வரஸ்வாமி கோவில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருப்புகலூர், திருக்கண்ணபுரம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மயிலாடுதுறை, நன்னிலம், தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி திருப்புகலூர், நாகப்பட்டினம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 20 Jul 2017
பார்வைகள் 428
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்