வழிபாட்டுத் தலம்
திருவேளுக்கை முகுந்த நாயகன் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருவேளுக்கை முகுந்த நாயகன் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | மண்ணகரன் மாமாட வேளுக்கை, காமாஷிகா நரசிம்ம சன்னதி |
| ஊர் | காஞ்சிபுரம் |
| வட்டம் | காஞ்சிபுரம் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | அழகிய சிங்கர், நரசிம்மர், ஆள் அரி, முகுந்த நாயகன் |
| தாயார் / அம்மன் பெயர் | வேளுக்கை வல்லி, அம்ருதவல்லி, தனிக்கோயில் நாச்சியார் |
| திருக்குளம் / ஆறு | கனக ஸரஸ், ஹேம சரஸ் |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | வைகுண்ட ஏகாதசி, இராமநவமி, நரசிம்ம ஜெயந்தி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பல்லவர், சோழர், விசயநகரர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் ஆள்அரி எனும் மூலவர் மேற்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் காட்டப்பட்டுள்ளார். |
| தலத்தின் சிறப்பு | 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். பேயாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. |
|
சுருக்கம்
மூலவருக்கு ஆள் அரி என்ற அழகு தமிழ்ச்சொல்லால் திருநாமம் அமைந்துள்ளது, ஒரு தனிச் சிறப்பாகும். ‘மன்னு மதிட்கச்சி வேளுக்கை ஆள் அரி’ என்பது திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம். யோக நரசிம்மராக எழுந்தருளியிருக்கும் இவர் சிறந்த வரப்பிரசாதி. இவரை விட இங்கிருக்கும் உற்சவர் பேரழகு பொருந்தியவர். புராண வரலாற்றின்படி பிருகு மஹரிஷிக்கு கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுத்ததாக ஐதீஹம். தற்போது நரசிம்மனாகயோக முத்திரையுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம். இம்மாற்றத்திற்கான காரணம் அறியுமாறில்லை. பேயாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம். பேயாழ்வார் 3 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். பேய்பிடித்தவர் போல் பகவான் மீது பற்றுக் கொண்டு, பாசுரம் பாடுபவர் என்பது பாடலாலே விளங்கும். ஸ்ரீஸ்வாமி தேசிகன் இப்பெருமாள் மீது ‘காமாஸி காஷ்டாகம்’ அருளிச் செய்துள்ளார். நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதியில் பிள்ளைப் பெருமாளையங்கார்.
|
|
திருவேளுக்கை முகுந்த நாயகன் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயிலின் விமானம் கனக விமானம் என்னும் அமைப்பைக் கொண்டது. மாமாட வேளுக்கை என்ற மங்களாசாசனத்தால் ஒரு காலத்தில் இத்தலம் அமைந்திருந்த பகுதி மாட மாளிகைகளுடன் கூடின பிரம்மாண்டமான தோற்றத்தோடு, பெரிய அளவிற்கான பரப்பளவை உள்ளடக்கியதாக இருந்திருக்க வேண்டும். சிதிலமடைந்து, சிறிய கோவிலாக மாறிவிட்ட இத்தலம் சமீபகாலத்தில் புதுப்பிக்கப்பட்டு திருப்பணி செய்யப் பெற்று திகழ்கிறது. இங்கு பெருமாள், தாயார், கருடன், ஆகியோருக்கும் சன்னதி உண்டு. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | விளக்கொளி பெருமாள் கோயில், அட்டபுயக்கரத்தான் கோயில், திருநீரகம், திருக்காரகம், திருக்கார்வானம் |
| செல்லும் வழி | காஞ்சிபுரத்திலேயே விளக்கொளி பெருமாளின் திருக்கோவிலிலிருந்து இடதுபுறம் செல்லக்கூடிய சாலையில், மூன்று தெருக்களைக் கடந்து பிரகாசமாகத் தென்படுகிறது. அட்டபுயக்கரத்தான் சன்னதியிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
திருவேளுக்கை முகுந்த நாயகன் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | காஞ்சிபுரம் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | காஞ்சிபுரம் |
| அருகிலுள்ள விமான நிலையம் | சென்னை - மீனம்பாக்கம் |
| தங்கும் வசதி | காஞ்சிபுரம் நகர விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 29 Nov 2018 |
| பார்வைகள் | 42 |
| பிடித்தவை | 0 |