வழிபாட்டுத் தலம்
ஐவேந்தனேந்தல் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் ஐவேந்தனேந்தல் கோயில்
வேறு பெயர்கள் ஸ்ரீஆண்டவர் நல்லூருடைய அய்யனார் கோயில்
ஊர் பெருங்குடி
வட்டம் மதுரை தெற்கு
மாவட்டம் மதுரை
உட்பிரிவு 5
திருக்குளம் / ஆறு பெருங்குடி கண்மாய்
வழிபாடு ஒருகால பூசை
திருவிழாக்கள் மாசி மகாசிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் கி.பி.17-ஆம் நூற்றாண்டு/நாயக்கர் காலம்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறையில் அய்யனார் பூரணை தேவி மற்றும் பொற்கலை தேவியுடன் வீற்றிருக்கிறார். கருவறையின் எதிரே அண்ணலின் யானை வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. கன்னிமார் எழுவரின் புடைப்புச்சிற்பம் ஒரே பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. காவல் தெய்வங்களான பெரியகருப்பு, சின்னகருப்பு ஆகிய தெய்வ உருவங்கள் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. வீரவழிபாட்டிற்குரிய இக்கோயிலில் அனுமன் சிற்பமும் வழிபாட்டில் உள்ளது.
தலத்தின் சிறப்பு தீர்த்தத் தலம்.
சுருக்கம்
ஸ்ரீஆண்டவர் நல்லூருடைய அய்யனார் கோயில் எனப்படும் ஐவேண்டானேந்தல் அய்யனார் கோயில் ஆற்றங்கரைத் தலமாகும். இயற்கை எழில் வாய்ந்தவிடத்தில் அமைந்துள்ள இக்கோயில் பன்னெடுங்காலமாக வழிபாட்டில் உள்ளது. கோயில் கட்டிட அமைப்பு தற்காலத்தியதாயினும் வழிபாடு தொன்மையானது.
ஐவேந்தனேந்தல் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் ஆற்றங்கரையோரமாய் இயற்கை எழில் கொஞ்சும் விதமாய் அமைந்துள்ளது. சுற்றிலும் பெரிய மதிற்சுவருடன் பெரிய வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. வாயிலின் எதிரே நேர்க்கோட்டில் கருவறை உயரமான மண்டபத்துடன் கூடியதாக உள்ளது. கருவறையின் இருபுறமும் கருப்பசாமி காவல்தெய்வங்களின் சந்நிதிகள் உள்ளன. கோயில் திருச்சுற்றில் அனுமன், ஏழு கன்னிமார் சிற்பங்கள் வழிபாட்டில் உள்ளன. கருவறை விமானம் சுதைச் சிற்பங்களால் ஆனது. ஒரு தளம் கொண்ட அய்யனாரின் கருவறை தற்காலத்தில் புனரமைக்கப்பட்டது.
பாதுகாக்கும் நிறுவனம் ஊர் நிர்வாகம்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் கருப்பசாமி கோயில், மாரியம்மன் கோயில்
செல்லும் வழி மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் பெருங்குடி விமானநிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் செல்கின்றன.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
ஐவேந்தனேந்தல் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் பெருங்குடி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மதுரை
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி மதுரைநகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் ராஜ் ஸ்ரீராம், சித்தார்த்தன், தமிழ், அரிகரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 44
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்