வழிபாட்டுத் தலம்
அருள்மிகு திருவாப்புடையார் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு திருவாப்புடையார் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | திருஆப்பனூர், திருவாப்புடையார் கோயில் |
| ஊர் | செல்லூர், மதுரை |
| வட்டம் | மதுரை |
| மாவட்டம் | மதுரை |
| தொலைபேசி | 0452 - 2530173 |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | ஆப்புடையார், அன்னவிநோதர், இடபேஸ்வரர், ஆப்பனூர் நாதர் |
| தாயார் / அம்மன் பெயர் | குறவங்கமழ் குழலி, சுகந்த குந்தளாம்பிகை |
| தலமரம் | கொன்றை |
| திருக்குளம் / ஆறு | வைகை ஆறு, இடப தீர்த்தம் |
| வழிபாடு | காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் |
| திருவிழாக்கள் | ஆனி உத்திரம், ஆடிப்பூரம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், மார்கழி திருவாதிரை, மாசி மகம் பிரம்மோற்சவம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு/ முற்காலப் பாண்டியர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் இலிங்க வடிவில் திருவாப்புடையார் காட்சியளிக்கிறார். மேலும் அம்மன் திருமுன்னில் சுகந்த குந்தளாம்பிகை நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். அனுக்ஞை விநாயகர், முருகன், நடராஜர், காசிவிசுவநாதர், மீனாட்சியம்மன், நவக்கிரகங்கள் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. மேலும் முருகன், சுப்பிரமணயன் ஆகிய படிமங்கள் தனிச்சிற்பங்களாகவும், கஜலெட்சுமி, காளி, சுப்பிரமணியர், பிட்சாடனர் உள்ளிட்ட இறை வடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாகவும் அமைந்துள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. திருஞானசம்பந்தரால் (முதலாம் திருமுறை) தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். பிற்காலப்பாண்டியர் கலைப் பாணியைப் பெற்றுள்ளது. |
|
சுருக்கம்
திருவாப்புடையார் கோயில் பாண்டிய நாட்டில் உள்ள 14 தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்களில் 4- வது பழமையான திருத்தலம் ஆகும். திருஞானசம்பந்தர் இத்தலத்தினைப் பாடியுள்ளார். மதுரையில் உள்ள பஞ்ச பூதத் தலங்களில் அப்பு(நீர்) தலம் என்ற பெருமை வாய்ந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலாக விளங்குகிறது. வைகை ஆற்றங்கரையோரக் கோயிலாக விளங்குகிறது. இந்திரன், குபேரன் போன்றோர் இங்கு வந்து வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இத்தலத்து இறைவன் கடவுள் எதிலும் உறைந்து உள்ளார் என்பதை காட்டி நிற்கிறார்.
|
|
அருள்மிகு திருவாப்புடையார் கோயில்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், ஆதிசொக்கநாதர் கோயில், காஞ்சனமாலை கோயில், தென்திருவாலவாய்க் கோயில், காலபைரவர் கோயில், செல்லத்தம்மன் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், முக்தீஸ்வரர் கோயில் |
| செல்லும் வழி | மதுரை நகரின் ஒரு பகுதியான செல்லூர் என்ற இடத்தில் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 17, 17A, 17C பேருந்துகளில் ஏறி திருவாப்புடையார் கோவில் நிறுத்தம் என்று கேட்டு இறங்கினால் கோவில் மிக அருகில் உள்ளது. மதுரை நகரின் ஒரு பகுதியானசிம்மக்கல் என்ற இடத்தில் இருந்து வைகை ஆற்றைக் கடந்து சென்றும் இக்கோவிலை எளிதில் அடையலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 11.00 மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 வரை |
அருள்மிகு திருவாப்புடையார் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, புதூர், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | மதுரை |
| அருகிலுள்ள விமான நிலையம் | மதுரை |
| தங்கும் வசதி | மதுரை நகர விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 02 Jun 2017 |
| பார்வைகள் | 114 |
| பிடித்தவை | 0 |